பாங்காக், ஜூலை 31- தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பரபரப்பான சாடுசக் காய்கறி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
வழக்கம்போல் மக்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தபோது, துப்பாக்கியுடன் வந்த நபர் ஒருவர் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இந்தத் தாக்குதலில் 4 பாதுகாவலர்களும், ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தியவர் பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாங்காக் காவல்துறை, “துப்பாக்கிச்சூடு நடத்திய கொலையாளியை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடை யிலான மோதல் போக்கு இந்த சம்பவத்திற்குக் காரணமா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்,” என்று தெரிவித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே தாய் லாந்தில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.