நாடாளுமன்ற வரையறையை தென் மாநிலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்க்கவேண்டும் – மாணிக்கம் தாகூர்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

விருதுநகர், ஜூன் 13 நாடாளுமன்ற புதிய வரை யறையை தென்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்க்கவேண்டும் என்று விருதுநகர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்  நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே நடைபெற்று முடிந்துள்ளது. 

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இருக்கை எண்ணிக்கை 888 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 534 உள்ள நிலையில் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 ஆக உள்ளது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தாங்கள் என்ன நினைக்கிறார்களோ அதை நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்ற திட்டமிடுகின்றனர். அந்த வகையில் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறு வரைவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறு வரைவு செய்யப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் வட மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தொகுதி மறு வரைவு, பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பன உள்ளிட்ட காரணிகளை கூறி தென் மாநில நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

எனவே நாட்டின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதால் தென் மாநில முதலமைச்சர்களும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த முயற்சியை கடுமையாக எதிர்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கும். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *