இது எப்படி இருக்கு? பீகாரில் வளர்ப்பு நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரி

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜூலை 29- பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி 2003ஆம் ஆண்டுக்கு பிறகு வாக் காளராக பதிவு செய்து கொண்டவர்கள், தாங்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க பிறப்பு சான்று, கடவுச்சீட்டு, குடியிருப்பு சான்று போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் எழுந்து உள்ளது.

நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ்

இந்த சூழலில் பீகார் தலைநகர் பாட்னாவின் சவுரி பகுதியில் ‘டாக் பாபு’ என்ற பெயரில் வளர்ப்பு நாய்க்கு குடியிருப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. டாக் பாபுவின் தந்தை பெயர் குடா பாபு, தாயின் பெயர் குடி தேவி என்று சான்றிதழில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சான்றிதழில் பீகார் வருவாய் துறை அதிகாரி முராரி சவுகான் கையெழுத்திட்டு உள்ளார். அரசு அலுவலகத்தின் கவுன்ட்டர் மூலமாக நேரடியாக வழங் கப்பட்டுள்ள சான்றிதழில் நாயின் புகைப்படமும் அச்சிடப்பட்டு உள்ளது.

இந்த குடியிருப்பு சான்றிதழ் சமூக வலை தளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து நாய்க்கு வழங்கப்பட்ட குடியிருப்பு சான்றிதழை பீகார் வருவாய் துறை ரத்து செய்தது. மேலும் நாயின் பெயரில் விண்ணப்பத்தை சமர்ப்பித்த நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப் படுகிறது. தவறிழைத்த அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறை தெரிவித்துள்ளது.

வழக்குப் பதிவு

புகாரின் அடிப்படை யில் வழக்குப் பதிவு செய் துள்ளனர். குடியிருப்பு சான்றிதழை தயார் செய்த கணினி ஊழியர், கையெழுத்திட்ட வருவாய் அதிகாரி மற்றும் அடையாளம் தெரியாத விண்ணப்பதாரர் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து ஆட்சியர் டாக்டர் தியாகராஜன் கூறும்போது, ‘எதிர் காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க, தவறிழைத்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது மிகக் கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார். ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி யின்போது இந்திய குடியுரிமையை நிரூபிக்க குடியிருப்பு சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

தற்போது பாட்னா வில் ஒரு நாய், குடியி ருப்பு சான்றிதழை பெற் றிருக்கிறது. மோசடி வழியில் ஆதார், ரேஷன் அட்டைகளை பெற முடியும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. தற்போது பீகாரில் நாய்க்கு குடியிருப்பு சான்று வழங் கப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் ஆணையமே பதில் அளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *