ஷென்சென், ஜூலை 28- சீனாவில் ஷென்சென் மாகாணத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு குழந்தை விரைவில் குணமாக அதன் பெற்றோர் மருத்துவர் பரிந்துரைத்த அளவை விட அதிகமாக மருந்து கொடுத்தனர். இதனால், குழந்தையின் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
திரவ மருந்து
பொதுவாக, குழந்தைகளின் உடல் எடையையும் ஏற்றுக் கொள்ளும் திறனையும் பொறுத்தே மருத்து வர்கள் மருந்துகளைப் பரிந்துரை செய்வார்கள். இந்நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று, சில திரவ மருந்துகளை (சிரப்) கொடுக்கச் சொல்லி யிருக்கிறார்.
கூடுதல் மருந்து
ஆனால், காய்ச்சல் குறையவில்லை எனக் கருதிய பெற்றோர், மருத்துவர் பரிந்துரைத்த அளவை விடக் கூடுதலாக மருந்தை குழந்தைக்குக் கொடுத்துள்ளனர். இதனால் குழந்தையின் உடல்நலம் மோசமடைந்து, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விசாரித்தபோதுதான், பெற்றோர் ஒரே நாளில் நான்கு முறை அளவுக்கு அதிகமான மருந்தை குழந்தைக்குக் கொடுத்தது தெரியவந்தது.
அய்ந்து மடங்கு
அதிகமான மருந்தை…
குழந்தை உட்கொண்டிருக்க வேண்டிய அளவைவிட சுமார் அய்ந்து மடங்கு அதிகமான மருந்தைப் பெற்றோர் வழங்கியதாகக் கூறப்படு கிறது. இந்தச் சம்பவம், குழந்தைகளுக்கு மருந்துகள் வழங்கும் முன், சரியான அளவு மற்றும் வழிமுறைகள் குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை கடுமையாக வலியுறுத்துகிறது.