ராய்ப்பூர், ஜூலை 28 அரசு பள்ளியில் தகுதி யற்ற ஆசிரியரால் மாணவர்களின் கல்வி பாதிப்பு – சமூக நியாயம் கேள்விக்குறியாகி உள்ளது.
கல்வித்துறை ஆய்வாளர்
பாஜக ஆளும் மாநிலமான சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், அரசு பள்ளியில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் ஆசிரியர் சுரேஷ் தீக்ஷிக் மீது பல புகார்கள் எழுந்த நிலையில், கல்வித்துறை ஆய்வாளர் வகுப்பறைக்குச் சோதனை நடத்த சென்றுள்ளார்.
ஆய்வாளர், அந்த ஆசிரியரிடம் ‘‘சட்டீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் ராஜ்னூர் தகசில், 19 ஆவது அவின்யு’’ என்ற முகவரியை ஆங்கி லத்தில் எழுதும்படி கூறியுள்ளார்
அவரோ, ‘‘Night im Alloyn-NING IN AIVENE NINITHIN’’ என்று தவறாக மூன்று முறையும் எழுதியுள்ளார். இவரது தகுதி யின்மை தெரிந்தும் சட்டீஸ்கர் பா.ஜ.க. அரசு இவரை நியமிப்பதற்குப் பின்னால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி யின மாணவர்களுக்கு கல்வி சென்று சேர வேண்டாம் எனும் மனுவாதி சிந்தனையே காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.
பார்ப்பனர் என்பதற்காக மட்டும் வேலை, பதவி உயர்வு மற்றும் சலுகைகள் பெறுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால், அரசின் கல்விக் கொள்கை மற்றும் சமூக நியாயம் கேள்விக்குறியாகியுள்ளது.