அரசியலமைப்பிலிருந்து மதச்சார்பின்மை மற்றும் சோசலிசத்தை அகற்ற பா.ஜ.க. முயற்சி மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

புவனேசுவர், ஜூலை 26- பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு இந்திய அரசியலமைப்பிலிருந்து மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் ஆகிய கொள்கைகளைத் தவிர்க்க முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். “சம்விதான் பச்சாவ் சமவேஷ்” (அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு) நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பாஜகவின் நோக்கம் அரசியலமைப்பை மாற் றுவது தான் என்று தெரி வித்தார்.

கார்கே தனது உரை யில், “பாஜக ஆட்சியின் கீழ் பழங்குடியினர், தாழ்த் தப்பட்ட சமூகத்தினர் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்குப் பாது காப்பு இல்லை. நமது அரசியலமைப்பிலிருந்து மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் ஆகியவற்றைத் தவிர்க்க பாஜக முயற்சிக் கிறது” என்று கூறினார்.

ஏழைகள் மற்றும் பழங்குடியினரைப் பாதுகாக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சி 2006இல் வன உரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், “நரேந்திர மோடி தலைமையிலான அரசு அந்தச் சட்டத்தைப் பல வீனப்படுத்த முயற்சிக்கிறது. தொழில்துறை என்ற பெயரில், பாஜக அரசு அனைத்து இடங்களிலும் காடுகளை அழித்து வரு கிறது” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு எதிரான அத்துமீறல்கள்

“தாழ்த்தப்பட்ட சமூகத் தினர் பழங்குடியினர் மற்றும் இளைஞர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடவில்லை என்றால் அவர்களை அழித்துவிடுவார்கள்” என்று எச்சரித்த கார்கே, ஒடிசாவில் பாஜக ஆதரவாளர்கள் “தாழ்த்தப்பட்ட சமூகத்தி னர்களையும் அரசு அதிகாரிகளையும் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார். சமீபத்தில் ஒடிசாவின் கஞ்சத்தில் இரண்டு தாழ்த்தப்பட்ட சமூக ஆண்கள் மொட் டையடிக்கப்பட்டு, முழங்காலிட்டு நடக்க வைக்கப்பட்டதாகவும், புல் சாப்பிடவும், அசுத்தமான தண்ணீரைக் குடிக்கவும் கட்டாயப்படுத்தப ்பட்டதாகவும், பெண்கள் பாலியல் வன்கொடு மைக்கும் ஆளாக்கின்றனர். பெண்கள் நடூவீதி யில் தீவைத்து எரிக்கப் படுகின்றனர். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் பாஜக இந்த மாநிலத்திற்கு அநீதி இழைத்து கொண்டு உள்ளது.

காங்கிரஸ் அரசு இந்தியாவில் 160 பொதுத்துறை நிறுவனங்களை அமைத்த நிலையில், பாஜக ஆட்சியில் 23 நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளதாக கார்கே தெரிவித்தார். “காங்கிரஸால் உருவாக்கப் பட்ட பொதுச் சொத்துக் களை மோடி தனது நண்பர்களுக்கு விற்கிறார்” என்றும் அவர் சாடினார்.

பாஜக மாநிலத்திற்கு எதுவும் செய்யாமல் பெருமை மட்டும் பெற விரும்புகிறார்கள். ஆனால், நாங்கள் ஒடிசா மக்களுடன் நிற்கிறோம்” என்று உறுதிபடக் கூறி னார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *