ந.க.3536/2025/அ5
நாள்: 24.7.2025
வீரையன், த/பெ.பெரியசாமி அத்திவெட்டி கிழக்கு கிராமம், பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்
– மனுதாரர்
– எதிர் –
இல்லை
– எதிர் மனுதாரர்
அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி கிழக்கு கிராமம் என்ற முகவரியில் வசிக்கும் வீரையன் த/பெ. பெரியசாமி ஆகிய நான் கொடுக்கும் அறிவிப்பு என்னவென்றால், எனது தந்தை பெரியசாமி த/பெ.ராமசாமி என்பவர் கடந்த 24.1.1999ஆம் தேதி மேற்படி முகவரியில் இறந்து விட்டார். அவரது இறப்பை அறியாமையினாலும் கவனக் குறைவினாலும் பதிவு செய்யத் தவறிவிட்டேன். எனவே தற்போது காலதாமத கட்டணத்துடன் பதிவு செய்ய உத்தரவிட வேண்டுமாய் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முன்பு மனு செய்திருந்தேன் அம்மனு விசாரணையில் உள்ளது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் இவ்வறிவிப்பு நாள் முதல் 15 நாட்களுக்குள் கனம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜராகி ஆட்சேபனையை தெரிவிக்க வேண்டியது. தவறினால் மனு அனுமதிக்கப்படும் என்பதை அறியவும்.
– மனுதாரர்