டோக்கியோ, ஜூலை21- ஜப்பானில் சமீபத்தில் நடைபெற்ற மேலவைத் தேர்தலில், ஆளும் மிதவாத ஜனநாயகக் கூட்டணி (Liberal Democratic Party) பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளதாக ஜப்பானின் அரசாங்க ஒலிபரப்புக்கழகமான NHK தெரிவித்துள்ளது.
ஜனநாயகக் கட்சி
பிரதமர் ஷிகெரு இஷிபாவின் மிதவாத ஜனநாயகக் கட்சிக்கு ஏற்கனவே 75 இடங்கள் இருந்த நிலையில், மேலவையில் பெரும்பான்மை பெற மேலும் 50 இடங்கள் தேவைப்பட்டன. ஆனால், ஒரு இடத்திற்கான முடிவு இன்னும் வெளிவராத நிலையில், ஆளும் கூட்டணிக்கு 47 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இது பெரும்பான்மையை விடக் குறைவாகும்.
தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத போதிலும், பிரதமர் இஷிபா தனது பதவியில் தொடர்ந்து நீடிப்பதாகக் கூறியுள்ளார். அமெரிக்கா அறிவித்துள்ள தீர்வைகளையும், நாடு எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களையும் சமாளிக்க அரசியல் நிலைத்தன்மை அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
ஜப்பானில் பிரதமரின் பதவியை மக்களவையே தீர்மானிக்கும். கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இஷிபாவின் கட்சி சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்தது குறிப்பிடத்தக்கது. மேலவையில் மொத்தம் 248 இடங்கள் உள்ளன.
இந்தத் தேர்தலில், ஆளும் மிதவாத ஜனநாயகக் கூட்டணி 122 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.