கால நிர்ணயம் செய்து அவசரமாக சீர்திருத்தம் செய்ய வேண்டும்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஜெனீவா, ஜூலை 19 அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலை காலநிர்ணயம் செய்து அவசரமாக சீா்திருத்தம் செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

சீர்திருத்தம்

இதுதொடா்பாக அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பி. ஹரீஷ், ‘அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலின் விரிவாக்கம், பன்னாட்டு நிதி பெறுவதில் மறுசீரமைப்பு போன்றவற்றில் சீா்திருத்தம் செய்வதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உலகளாவிய ஒத்துழைப்பு வலுப்படுத்தல், நடப்பு மற்றும் வருங்கால சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று கடந்த 2024-இல் எதிர்கால ஒப்பந்தத்தை அய்.நா. ஏற்றுக் கொண்டுள்ளது.

இதன்படி, தற்போதைய புவிசார் அரசியல் சூழ லுக்கு ஏற்ப அய்.நா. பாது காப்பு கவுன்சில் சீா்திருத்தம் செய்யப்பட வேண்டும். இதனை பெரும் பான்மையான நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. அய்.நா. எதிர்கால ஒப்பந்தத்தை திறம்பட நிறைவேற்ற அனைத்து உறுப்பு நாடு களுடன் இணைந்து பணி யாற்ற இந்தியா தயாராக உள்ளது. 2028-இல் மேற் கொள்ள வேண்டிய இந்த அய்.நா. எதிர்கால ஒப்பந்தம் முடிவுகளைத் தரக் கூடியதாக இருக்க வேண்டும்’ என்றார்.

முன்னதாக, இந்தி யாவின் சார்பில் எதிர் கால ஒப்பந்தத்தின்  மொழியாக்கத்தை அய்.நா. பொதுச் சபை தலைவா் ஃபில்மான் யாங்கிடம் பி. ஹரீஷ் அளித்தார். அமைதி, பாதுகாப்பு, நீடித்த வளா்ச்சி, காலநிலை மாற்றம், எண்ம ஒத்துழைப்பு, மனித உரிமைகள், பாலினம், உலகளாவிய ஆளுகையை மேம்படுத்தல் ஆகியவை குறித்த ஆய்வுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

21-ஆம் நூற்றாண்டுக்கு புவி அரசியலுக்கு ஏற்ப அய்.நா. பாதுகாப்பு கவுன் சிலை சீா்தீருத்தம் செய்து, இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்று இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *