17.7.2025
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* “தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் பிரச்சினையை தீர்க்காமல், அரசியல் செய்கிறது பாஜக” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* காங்கிரஸ் ஆட்சி வந்தால், அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சிறைக்குப் போவார், அவரை மோடியும், அமித்ஷாவும் காப்பாற்ற முடியாது”: ராகுல் காந்தி உறுதி. பாஜக ஆட்சியில் ஊழல் அதிகமாகி விட்டது என கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “திராவிட மாதிரி 2.0 நிகரற்றது – பாஜக கூட ஒப்புக் கொள்ளும்” – முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்: ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’, மற்றும் ‘விடியல் பயணம் திட்டம்’ ஆகியவற்றை சுட்டிக்காட்டி, இத்திட்டங்கள் திராவிட மாதிரி 2.0அய் சாதனையாக உருவாக்கியுள்ளன; இதற்கு பாஜக கூட மறுக்க முடியாமல் ஒப்புக்கொள்ளும் என பேச்சு.
* பீகார் தேர்தலுக்கு முன்னோட்டமாக, ராகுலின் திட்டத்திற்கு முழு ஆதரவு – காங்கிரஸ் ஓபிசி குழு தீர்மானம். பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஜாதிவாரி மக்கள்
* எண்ணிக்கை மற்றும் ஓபிசி சமூகத்திற்கு ஆதரவு வழங்கும் ராகுல் காந்தியின் திட்டத்திற்கு முழுமை யான ஒப்புதலையும் ஆதரவையும் தெரிவித்தது.
தி இந்து:
* வீட்டு வளாகத்தில் நாமசங்கீர்த்தனம் செய்யக்கூடாது.சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு: “சிலருக்குப் பவித்ரமான இசை போல் தோன்றும் விசயம், மற்றவர்களுக்கு தொந்தரவு தரக் கூடும்” எனக் குறிப்பிட்ட சென்னை உயர்நீதிமன்றம், நாமசங்கீர்த்தனம் (இந்து கடவுளின் நாமங்களை கூட்டமாக பாடுதல்) வீட்டு வளாகங்களில் நடைபெறுவதை தடுக்கும் வகையில் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
* “பீகார் சட்டமன்ற தேர்தலில் 1% வாக்காளர்கள் நீக்கப்பட்டால் 35 தொகுதிகளில் முடிவுகள் பாதிக்கப்படும்” – தேஜஸ்வி: 2020ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்ய பாஜக இந்த சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) பயன்படுத்துகிறது என ஆர்.ஜெ.டி தலைவர் தேஜஸ்வி குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* ஹரித்வார், மீரட், காசியாபாத்தில் சிவ பக்தர்கள் என தங்களை அழைத்துக் கொள்ளும், கன்வாரியர்கள் அட்டூழியம் – காவல்துறையின் அமைதியால் கேள்விக்குறி: உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்திற்குள் பல்வேறு இடங்களில் கன்வாரியர்களால் சட்ட ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ளது.
– குடந்தை கருணா