ஜம்மு காஷ்மீரில் 20 பேருடன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வேன்: 5 பேர் பலி

Viduthalai

சிறீநகர், ஜூலை 15  ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.

ஆல் பகுதியில் இருந்து வேன் ஒன்று அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்தது. தோடா நகர பகுதிக்குச் சென்ற அந்த வாகனத்தில் 20க்கும் மேற்பட்டோர் இருந்தனர். தோடா மாவட்டத்தில் பாரத்-பாக்லா சாலையில் வேன் வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

வந்த வேகத்தில் வேன் பள்ளத்தாக்கில் பாய்ந்தது. இதில் வேனில் இருந்தவர்களில் 5 பேர் உடல் நசுங்கி பலியாகினர். இடிபாடுகளில் சிக்கிய மற்றவர்களை அங்குள்ளோரும், மீட்புக்குழுவினர் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

மீட்கப்பட்டவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *