பீஜிங், ஜூலை 14- தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, அவற்றை நம் இஷ்டத்துக்கு பயணிக்க வைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.
இயற்கை பேரிடர், தீவிரவாத தடுப்புக்கு உதவும் என்று கூறப் பட்டாலும், தேனீக்களை உளவாளியாகவும் பயன்படுத்த முடியும்.
உயிரினங்களை கருவிகள் வாயிலாக கட்டுப்படுத்தும், ‘சைபோர்க்’ என்ற தொழில்நுட்பம் தொடர்பாக பல நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.
இந்த வகையில், தேனீயின் மூளையை கட்டுப்படுத்தி, நம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் முயற்சியில், சீனாவைச் சேர்ந்த பீஜிங் தொழில்நுட்ப மய்யத்தின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
1,340 இளநிலை பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
ஜூலை 21 வரை அவகாசம்
சென்னை, ஜூலை 14- ஒன்றிய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள இளநிலை பொறியாளா் பிரிவில் 1,340 காலிப் பணியிடங்களுக்கான தோ்வுக்கு வரும் ஜூலை 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று ஒன்றிய பணியாளா் தோ்வாணையம் (எஸ்.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று (14.7.2025) வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் கட்டுமானப் பொறியியல் (சிவில்), இயந்திரவியல் (மெக்கானிக்கல்), மின்னியல் (எலக்ட்ரிக்கல்) பிரிவில் 1,340 காலிப்பணியிடங்கள் உள்ளன.
இதற்கான தோ்வுக்கு வரும் ஜூலை 21-க்குள் https://ssc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான தோ்வுகள் வரும் அக்டோபா் மாதம் கணினி வாயிலாக நடைபெறவுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, வேலூா், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய மய்யங்களில் இத் தோ்வு நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.