ஆதாயம் இல்லாமலா ஆற்றைக் கட்டி இரைப்பார்கள்! தொழிலதிபர் அனில் அகர்வால் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் பிஜேபிக்கு கொடுத்த நன்கொடை நான்கு மடங்கு அதிகம்

1 Min Read

புதுடில்லி, ஜூலை.14- பிரபல தொழில் அதிபர் அனில் அகர்வாலுக்கு சொந்தமான வேதாந்தா லிமிடெட் தனது ஆண்டுவாரி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், ‘இதர செலவுகள்’ என்ற தலைப்பின்கீழ், அரசியல் கட்சிக ளுக்கு வேதாந்தா நிறுவனம் கொடுத்த நன்கொடை பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த 2024-2025 நிதியாண்டில், பா.ஜனதாவுக்கு வேதாந்தா நிறுவனம் ரூ.97 கோடி நன்கொடை அளித்துள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டில், வேதாந்தா நிறுவனம் ரூ.26 கோடி மட்டுமே நன்கொடை அளித்திருந்தது. எனவே, அதனுடன் ஒப்பிடுகையில், ஒரே ஆண்டில் பா.ஜனதாவுக்கு 4 மடங்கு அதிகரித்துள்ளது.

அளிக்கப்பட்ட நன்கொடை

அதே சமயத்தில், 2023-2024 நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.49 கோடி நன்கொடை அளித்த வேதாந்தா நிறுவனம், கடந்த நிதியாண்டில் ரூ.10 கோடி மட்டுமே அளித்துள்ளது. பிஜு ஜனதாதளம் கட்சிக்கு கடந்த 2023-2024 நிதியாண்டில் ரூ.15 கோடியும், கடந்த நிதியாண்டில் ரூ.25 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 2023-2024 நிதியாண்டில் ரூ.5 கோடியும், கடந்த நிதியாண்டில் ரூ.20 கோடியும் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த 2023-2024 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு வேதாந்தா நிறுவனம் அளித்த மொத்த நன்கொடை ரூ.97 கோடியாகவும், கடந்த நிதியாண்டில் அளித்த மொத்த நன்கொடை ரூ.157 கோடியாகவும் உள்ளது. 2022-2023 நிதியாண்டில் மொத்தம் ரூ.155 கோடியும், 2021-2022 நிதியாண்டில் ரூ.123 கோடியும் நன்கொடையாக அளித்துள்ளது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *