ஜெய்ப்பூர், ஜூலை 12 ராஜஸ்தானில் தற்போது பஜன்லால் சர்மா தலைமையிலான பாஜ அரசு ஆட்சி செய்து வருகிறது. இங்கு பள்ளிகளில் ஆசாதி கே பாத் கா ஸ்வர்னியம் பகுதி 1 மற்றும் 2 துணைப்பாடப்புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த பாடப்புத்தகங்களில் நேரு மற்றும் காந்தியின் குடும்பத்தை பெருமைப்படுத்தும் வகையில் பாடங்கள் இருப்பதாக கூறி, அந்த துணைப்பாடப்புத்தகங்களை மாநில அரசு நீக்கி உள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் கூறுகையில், “ நேரு, காந்தி குடும்பங்கள் பற்றிய பாடங்களே உள்ளன. இதை படிப்பதால் தேர்வில் மதிப்பெண்கள் எதுவும் எடுக்க முடியாது. கல்விக்கு எந்த வகையிலும் உதவாத பாடப்புத்தகங்களை தொடர்வதில் எந்த அர்த்தமுமில்லை. எனவே அந்த துணைப்பாடப்புத்தகங்கள் நீக்கப்பட்டுள்ளன” என தெரிவித் துள்ளார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.