புதுடில்லி, ஜூைல 10 மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பட்டுக்கான தேசிய செயல் திட்டத்தை கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றிய அரசு தொடங்கியது. மாற்றுத்திறனாளிகளின் திறன்களை அதிகரிக்க தொழிற்பயிற்சி அளிப்பதுதான் இதன் நோக்கம்.
இந்நிலையில், இத்திட்டத்தில் பயனாளிகள் தங்குமிட படி, போக்குவரத்து படி உள்ளிட்ட பணப்பலன்களை பெற ஆதார் கட்டாயம் என்று ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், அரசிதழில் அறிவிப்பாணை வெளியிட் டுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள், ஆதாருக்கு விண்ணப்பித்த ஆதாரத்தை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
ஆதார் இல்லாத மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க வசதியாக ஆங்காங்கே ஆதார் பதிவு முகாம்கள் நடத்துமாறு ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆதார் எண் ஒதுக்கப்படும்வரை, பிறப்பு சான்றிதழ், பள்ளி ஆவணங்கள் போன்றவை மூலம் அடையாளத்தை உறுதிப்படுத்தலாம் என்றும் கூறியுள்ளது.