பீகார் வாக்காளர்களின் உரிமையைப் பறிப்பதா? ‘தி இந்து’ ஆங்கில நாளேடு தலையங்கத்தில் கண்டனம்!

2 Min Read

பீகார் வாக்காளர்களிடம் தேவையற்ற ஆவ ணங்களை கேட்டு, அவர்களின் வாக்களிக்கும் உரிமையைக் பறிக்கும் செயலை தேர்தல் ஆணையம் உடனடியாக கைவிட வேண்டும் என்று ‘தி இந்து’ ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள தலையங்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பீகாரில் அய்க்கிய ஜனதா தளம்  பா.ஜ.க., கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் நிதிஷ்குமார் முதலமைச்சராக இருந்து வருகிறார். இவரது ஆட்சிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், பீகாரில் விரைவில் சட்டப் பேரவைதேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்துப் பணிகளையும் தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக வாக்காளர் பட்டியலில் சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், பல முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. அய்க்கிய ஜனதா தளம் மற்றும்பா.ஜ.க. வுக்கு எதிராக உள்ளவாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் மூலம் முயற்சிகள் நடை பெறுவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் வெளி யிட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது,

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை வாக்காளர்களுக்குஏற்ற வகையில் எளிமையாக மேற்கொள்ளாமல், கடுமையாக மேற்கொள்வது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்தால்தான் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் என்றும், இல்லை யென்றால் நீக்கப்பட்டுவிடும் என்றும் அறிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம் எழுந் துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வளவு ஆண்டு காலம் வாக்களித்து வந்த வர்களிடம், சிறப்புத் திருத்தம் என்று கூறிகடுமையான ஆவணங்களைகேட்பது நியாயமற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அனைவரிடமும் இருக்கும்போது, இல்லாத 11 ஆவணங்களை கேட்பது, தங்க ளுக்கு எதிராக உள்ள வாக்காளர்களை நீக்கும் செயல் என்று விமர்சித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் முரண்பாடுகள் நிறைந்ததாக உள்ளது என்றும், வாக்காளர் உரிமைக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும் குற்றம்சாட்டப்பட் டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் செயல், தவறான சேர்க்கை அல்லது நீக்கத்துக்கு வழிவகுக்கும் என்றும், வாக்காளர் பட்டியலின் நேர்மையை குறை மதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

தேவையற்ற ஆவணங்களை கேட்டு, குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் செயலை தேர்தல் ஆணையம் உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த கட்டுப் பாடுகளை எளிமையாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நன்றி: ‘முரசொலி’ 9.7.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *