தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் காரணமாக, ஏராளமான வாக்காளர்கள் பட்டியலில் இருந்தும் நீக்கப்படும் ஆபத்து! பீகாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

Viduthalai
2 Min Read

பாட்னா, ஜூலை 10 – மகாராட்டிரா மாநில வாக்காளர் பட்டியலில் மோசடி நடைபெற்றதுபோல், பீகார் மாநிலத் தேர்தலிலும் மோசடியை அரங்கேற்ற சதி நடைபெற்று வருவதாகவும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் காரணமாக, ஏராளமான வாக்காளர்கள், பட்டியலில் இருந்தும் நீக்கப்படும் ஆபத்து ஏற்படும் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் குற்றச் சாட்டு

பீகார் மாநிலத்தில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க. வெற்றி பெறுவதற்கு சாதகமாக, வாக்காளர்களை நீக்கும் வகையில், புதிய திருத்த விதி களை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

வாக்காளர்கள், தாங்கள் இந்தி யர்கள்தான் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதன் மூலம் சுமார் 2 கோடி வாக்காளர்களை நீக்க சதி நடப்பதாக காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதையடுத்து, வாக்காளர் பட்டியலை மாற்றியமைக்கும் செயலுக்கு எதிராகவும், புதிய தொழிலாளர் விதிமுறை,சட்டம் – ஒழுங்கை கண்டித்தும் பீகார் தலைநகர் பாட்னாவில், மகாகத்பந்தன் என்ற பெயரில் எதிர்க் கட்சிகள் மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

பாட்னாவில் நடைபெற்ற போராட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா கட்சித் தலைவர் தேஜஸ்வி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வாக்காளர் பட்டியலில் பெருமளவு மோசடி

போராட்டத்தின் போது பேசிய ராகுல்காந்தி, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் காரணமாக, ஏராளமான வாக்காளர்கள், பட்டியலில் இருந்தும் நீக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மகாராட்டிராவில் வாக்கா ளர் பட்டியலில் பெருமளவு மோசடி நடைபெற்றுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும் ராகுல் காந்தி பேசுகையில்,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மகாராட்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணி பெரும்பான்மை வாக்குகள் பெற்றது. பிறகு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் இந்தியா கூட்ட ணிக்குப் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை.

குறைந்த காலத்தில்
ஒரு கோடி பேர் வாக்காளர்களாகச் சேர்ப்பு!

இதன் மூலம் மகாராட்டிராவில் வாக்காளர் பட்டியலில் மோசடி நடை பெற்றது உறுதியாகிறது. குறைந்த காலத்தில் ஒரு கோடி பேர் வாக்கா ளர்களாகச் சேர்க்கப்பட்டு அந்த வாக்குகள் பா.ஜ.க.விற்கு சென்றுள்ளன என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், வாக்கா ளர் பட்டியலை முழுமையாக வெளி யிட கோரிக்கை விடுத்தும், இதுவரை வெளியிடப்படவில்லை எனவும், தற்போது காட்சிப் பதிவு ஆதா ரங்களை யும் வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறுவதாகவும் குற்றஞ்சாட்டி னார்.

மகாராட்டிரா மாநில தேர்தல் மோசடி போன்று, பீகார் மாநிலத்திலும் மோசடியை அரங்கேற்ற சதி நடைபெற்று வருவதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *