மும்பை, ஜூலை 8 2025-2029 ஆம் ஆண்டுக்கான மாநில வாரியான வணிகச் சூழல் தரவரிசையை ‘தி எக்கனாமிஸ்ட் இன்லிடெஜென்ஸ் யூனிட் ஆண்ட றிக்கை’ வெளியாகி உள்ளது இதில் தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது
‘தி எக்கனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட்’ (EIU) என்பது தி எக்கனாமிஸ்ட் குழு மத்தின் ஒரு பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சிப் பிரிவாகும். இது உலகளாவிய வணிக சூழல்கள், அரசியல், பொருளாதாரம் மற்றும் பல்வேறு துறைகளில் ஆழமான நுண்ணறிவுகளையும், முன்னறிவிப்புகளையும் வழங்கி வருகிறது. வணிகம் செய்வதற்கு உகந்த சூழல் உள்ள நாடுகளையும், மாநிலங்களையும் மதிப்பிட்டு, தர வரிசைப்படுத்துகிறது. இந்தத் தர வரிசை கள், முதலீட்டாளர்கள் மற்றும் வணிக முடி வெடுப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள தக வல்களை வழங்குகின்றன.
அளவுகோல்கள் எவை?
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அரசியல் நிலைத்தன்மை, அரசின் செயல்திறன், சட்டம் மற்றும் ஒழுங்கு. பணவீக்கம், வளர்ச்சி விகிதம், நாணய நிலைத்தன்மை. சந்தையின் அளவு, வளர்ச்சி வாய்ப்புகள், போட்டித்தன்மை. சுதந்திர மான தொழில் மற்றும் போட்டி கொள்கைகள் (Policy towards free enterprise and competition): வணிக சுதந்திரம், போட்டி ஒழுங்குமுறைகள். வெளிநாட்டு முதலீடுகளுக்கு உள்ள விதிகள், சலுகைகள். இறக்குமதி/ஏற்றுமதி விதிகள், அந்நிய செலாவணி கட்டுப்பாடுகள். நிதி ஆதாரம், கடன் கிடைக்கும் தன்மை, தொழிலாளர் சட்டங்கள், திறமையான தொழிலாளர்கள் கிடைக்கும் தன்மை, ஊதிய நிலைகள். உள்கட்டமைப்புபோக்குவரத்து, மின்சாரம், தகவல் தொடர்பு, தொழில்நுட்ப உள்கட்டமைப்பு.
இந்த அளவுகோல்களின் அடிப்படையில், வணிகம் செய்வதற்கு மிகவும் சாதகமான சூழலை வழங்கும் இடங்களைப் பட்டியலிடுகிறது.
இந்தப் பட்டியலில் 2025-2029 வரையிலான மாநில வாரியான வணிகச் சூழல் தரவரிசையில், தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
பன்னாட்டு அங்கீகாரம்!
இச்சாதனை தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ அரசின் திறமையான செயல்பாடுகளுக்குக் கிடைத்த பன்னாட்டு அங்கீகாரமாகப் பார்க்கப்படு கிறது.
இந்தத் தரவரிசை, தமிழ்நாடு பின்வரும் அம்சங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது:
உலகளாவிய ஆட்டோமொபைல் நிறுவ னங்கள், மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள், பொறியியல் துறையின் பெரிய நிறுவனங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பெருநிறுவனங்கள் என பலதரப்பட்ட முதலீட்டாளர்களும் தமிழ்நாட்டை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் முதலீடு செய்தால், வெற்றி பெறுவது எளிது என்ற நம்பிக்கையை இந்த சூழல் ஏற்படுத்துகிறது.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு
ஒரு வலுவான அடித்தளம்!
தமிழ்நாடு அரசு, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.இராஜா தலைமையிலான குழு, ‘‘பிராண்ட் தமிழ்நாடு’’ என்பதை உலக அளவில் கொண்டு செல்வதில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. இதன் விளைவாக, தமிழ்நாட்டிற்கு பரவலான மற்றும் தொடர்ச்சியான உலகளாவிய பாராட்டு கிடைத்திருப்பது, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.
இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும், இந்தத் தரவரிசைப் பட்டியல், தமிழ்நாடு ஒரு சிறந்த தேர்வாகும் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. இது தமிழ்நாட்டின் நிலையான வளர்ச்சி மற்றும் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகளுக்கான ஒரு வலுவான அறிகுறியாகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு தொழில் துறையில் உலக அரங்கில் பெயர் பெற்று வருகிறது.