பீஜிங், ஜூலை 7- செயற்கை தொழில் நுட்ப சிப்புகள் மற்றும் அமெரிக்காவில் பயிலும் சீனா மாணவர்களின் விசா ரத்து தொடர்பான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
சீன மாணவர்களின் விசா ரத்து
அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா செயற்கை நுண்ணறிவு (AI) சிப்கள் மற்றும் சிப் வடிவமைப்பு மென்பொருள்களின் ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம் என்றும் சீன மாணவர்களின் விசாக்களை ரத்து செய்யும் திட்டமும் உள்ளது என்று குறிப்பிட்டார் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலக அளவில் நம்பகத் தன்மையையும் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான மீண்டும் வர்த்தக மோதல் மோதல் வெடித்துள்ள நிலையில் தொழில்நுட்ப மற்றும் வர்த்தகம் தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் கவலை அடைந்துள்ளன.