மக்களின் உரிமைக்காக, சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்துத் தீவிரமாக போராடியவர். திராவிட மணி இரட்டைமலை சீனிவாசன்.அவரது பகுத்தறிவுச் சிந்தனைகள் அவரது செயல்பாடுகளிலும் கருத்துகளிலும் ஆழமாக வேரூன்றியிருந்தன.
ஜாதி ஒழிப்பு
இரட்டைமலை சீனிவாசன் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளைக் கடுமையாக எதிர்த்தார். ஜாதியால் மனிதர்களைப் பிரிக்கும் முறையைப் பகுத்தறிவுக்குப் புறம்பானது என்று கருதினார். “பறையர் மகாஜன சபை” (பின்னர் ஆதிதிராவிட மகாஜன சபை) போன்ற அமைப்புகளை நிறுவி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடினார்.
கல்வியின் முக்கியத்துவம்
கல்விதான் பகுத்தறிவை வளர்க்கவும், சமூகத்தில் முன்னேற்றம் அடையவும் வழிவகுக்கும் என்பதை அவர் உறுதியாக நம்பினார். ஒடுக்கப்பட்ட மக்களிடையே கல்வியைப் பரப்புவதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். “பறையன்” என்ற இதழைத் தொடங்கி, அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மதுவிலக்கு
உழைக்கும் மக்களின் பொருளாதாரச் சீரழிவுக் குக் காரணம் என்று பகுத்தறிவுடன் உணர்ந்து மதுக்கடைகளை மூடுவதற்கான தீர்மானத்தை 1929-ல் சட்டசபையில் முன்வைத்து வலி யுறுத்தினார்.
சமூக சமத்துவம்
அனைத்து மக்களும் சமம், அனைவருக்கும் சம வாய்ப்பு வேண்டும் என்ற கோட்பாட்டை வலியுறுத்தினார். 1930-31ல் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் கல்ந்துகொண்டு ஒடுக்கப் பட்ட மக்களுக்கான தனிப் பிரதிநிதித்துவம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சம பங்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார். இது அவரது சமத்துவச் சிந்தனையின் வெளிப்பாடு.
சுயமரியாதை
ஒடுக்கப்பட்ட மக்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பதையும், தங்களைத் தாங்களே முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
ஆதிதிராவிடர்களுக்கான கோயில் நுழைவு உரிமையைப் பெற போராடினார்.
ஒடுக்கப்பட்டோர் கல்வி உரிமைக்காக ‘ஒடுக்கப்பட் டோர் கல்விக் கழகம்’ என்ற அமைப்பை நிறுவி, கல்வி உதவிகள் வழங்கினார்.
சென்னையில் காந்தி மண்டப வளாகத்தில் அவருக்காக மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
2000-ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அவரின் நினைவு தபால் தலைகளை வெளியிட்டது.
«««
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களும் – அண்ணல் அம்பேத்கர் அவர்களும் சென்னையில் சந்தித்துக் கொண்ட நாள் இன்று (07.07.1944).