பெண் மருத்துவருக்கு வரதட்சணையா? குடும்பத்தினர் மீது வழக்கு

viduthalai
1 Min Read

தேனி, ஜூலை 6– தேனி வீரபாண்டியை சேர்ந்த பெண் மருத்துவர் விமலாதேவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டிய மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த கணவரான யுடியூபர் சுதர்சன், அவரது பெற்றோர் சுந்தரராஜன், மாலதி, சகோதரி சக்திபிரியா, இவரின்கணவர் விக்னேஷ்வரன் மீது மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி மாவட்டம் வீரபாண்டி முல்லைநகர் விமலாதேவி 28. சிலஆண்டுகளுக்கு முன் மதுரையில் மருத்துவராக பணிபுரிந்தார். அப்போது சுதர்சனை காதலித்து பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்தார்.

வீட்டுக் கடன்

வரதட்சணையாகரூ. 5 லட்சம், 30 பவுன், ரூ. 2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை வழங்கினர். சுதர்சன் யுடியூப் சேனலில் பணிபுரிந்தார். பின் தனியாக சேனல் நடத்தினார். அப்போது சொந்த வீடு கட்டினார். அதற்கு விமலாதேவியின் 30 பவுன் நகையை வாங்கினார். பின் புது வீட்டிற்கு குடி புகுந்தனர். வீட்டுக்கடனை அடைக்க முடியவில்லை.

மேலும் வரதட்சணை, சீர்வரிசை பொருட்கள் போதாது என சுதர்சன், பெற்றோர் சுந்தரராஜன், மாலதி, சகோதரி சக்திபிரியா கூறினர். மேலும் 20 பவுன் நகை கொண்டு வந்தால் தான் சேர்ந்து வாழ முடியும் எனக்கூறினர்.

ரூ. 5 லட்சம்

இந்நிலையில் கர்ப்பமாக இருந்த விமலாதேவியை, அவரது பெற்றோர் தேனிக்கு அழைத்து வந்தனர். விமலாதேவி பெற்றோர் சுதர்சன் தரப்பினரிடம் பேசி ரூ. 5 லட்சம் வழங்கினர். பின் 2025 ஏப்., 30இல் வீரபாண்டி கோயில் அருகில் நடந்த பேச்சுவார்த்தையில் சுதர்சன், அவரது குடும்பத்தினர்

20 பவுன்

மேலும் 20 பவுன் கொண்டு வர வேண்டும் எனக் கூறி கொலைமிரட்டல் விடுத்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத்திடம் விமலாதேவி புகார் அளித்தார். காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவில் சுதர்சன், பெற்றோர் சுந்தரராஜன், மாலதி, சகோதரி சக்திபிரியா, கணவர் விக்னேஷ்வரன் மீது தேனி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *