காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
அய்தராபாத், ஜூலை 6 –42 நாடுகளுக்குச் சென் றுள்ள பிரதமர் மோடி, இன்னும் மணிப்பூருக்கு செல்லாதது ஏன் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
அய்தராபாத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி, உலகில் உள்ள 42 நாடு களுக்குச் சென்றுள்ளார். ஆனால் கலவரத்தால் பதிக்கப்பட்ட மணிப்பூருக்கு இதுவரை செல்லவில்லை என குற்றம் சாட்டினார்.
மணிப்பூரில் மக்கள் மடிந்துகொண்டிருப்பதாகக் கூறிய அவர், பிரதமருக்கு யாராவது ஒரு தொப்பியும், பதக்கமும் கொடுத்தால், அதைஅணிந்து கொண்டு எங்குவேண்டுமானாலும் செல்வார் என விமர்சித்த கார்கே,
மோடியின் வெளியுறவுக் கொள்கை தவறாக உள்ளதால், அனைத்து பகுதிகளிலும் நமக்கு எதிரிகள் உருவாகி விட்டனர் என்றும், ஒருபுறம் சீனா, மறுபுறம் பாகிஸ்தான் இருக்கும் நிலையில், நேபாளம் கூட நம்மிடம் இருந்து விலகி விட்டதாகவும் அண்டை நாடுகள் நம்மை விட்டு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சி, பொருளாதாரத்தை அழித்து விட்டதுடன், அரசியல் சாசனத்தையும் அழித்து விட்டதாகவும் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டினார்.