கோலாலம்பூர், ஜூலை 4 அய்.சி.டி அகடமி, தமிழ்நாடு – தன் முதல் வெளிநாட்டு கிளையை மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் அமைந் துள்ள பன்னாட்டுத் தலைமையகத்தில் நிறுவியதன் மூலம், மிக முக்கியமான ஒரு சாதனையை அடைந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்க விழா, நேற்று (3.7.2025) கோலாலம்பூரில் உள்ள ஹாலிடே இன் ஹோட்டலில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர், தமிழ்நாடு) அவர்கள் சிறப்புரையாற்றி, இந்த வெளிநாட்டு கிளையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அய்.சி.டி அகட மியைச் சார்ந்த 23 உறுப்பினர் கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. இவை, அய்.சி.டி. அகடமியுடன் இணைந்துள்ள சுறுசுறுப்பான கல்வி சமூகத்தைக் குறிக் கின்றன.
இந்த நிகழ்வின் முக்கியப்புள்ளியாக, மலேசியாவின் முன்னணி 23 பல்கலைக் கழகங்களை உள்ளடக்கிய Intelli Education Group மற்றும் இந்தியாவின் தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) ஆகிய நிறுவனங்களுக்கிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) பரிமாறப் பட்டுள்ளது
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
• கூட்டு ஆய்வுத் திட்டங்கள்
•இரட்டை பட்டப்படிப்பு திட்டங்கள்
•எதிர்கால நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு செயல்பாடுகள்
•மாணவர்கள் மற்றும் பேராசிரியர் களுக்கான பரிமாற்ற வாய்ப்புகள்
•கல்வி மற்றும் புதுமை சார்ந்த கூட்டுப் பணிகள்
இந்த ஒப்பந்தத்தைப் பரிமாறும் விழாவில், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறு வனத்தின் துணைவேந்தர் முனைவர் வி. ராமச்சந்திரன் மற்றும் அய்.சி.டி. அகடமி ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர். இது, பன்னாட்டு ஒத்துழைப்பு, கல்வித் தரநிலை மற்றும் உலகளாவிய ஈடுபாட்டிற்கான அந்த நிறுவனத்தின் உறுதியை வெளிப் படுத்துகிறது.
இந்தப் புதிய கூட்டாண்மை, இந்தியா–மலேசியா கல்வித் துறைக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தி, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஆராய்ச்சி, கல்வி மற்றும் திறன்சார் வளர்ச்சிக்கு புதிய திசைகளைத் திறக் கிறது.