கேதார்நாத் சிவன் எங்கே போனான்? நிலச்சரிவால் கேதார்நாத் யாத்திரை நிறுத்தம்

viduthalai
1 Min Read

ருத்ரபிரயாக், ஜூலை 4 உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள , கேதார்​நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொட ரில் கடல் மட்டத்திலிருந்து 3983 மீட்டர் உயரத்தில் சிவன் கோவில் உள்ளது.

இக்கோவிலுக்கு பக்தர்கள் யாத்தி ரையாக செல்வார்கள்.

உத்​தர​காண்ட் மாநிலத்​தில் நேற்று முன்​தினம் (2.7.2025) கனமழை பெய்​தது. இதனால் சோன்​பிர​யாக் அரு​கே​யுள்ள முங்​காட்​டியா என்ற இடத்​தில் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. இதனால் முன்னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக கேதார்​நாத் யாத்​திரையை மாவட்ட நிர்​வாகம் தற்காலிக​மாக நிறுத்​தி​யுள்​ளது.

கவுரி​குந்த் பகு​தியி​லிருந்து திரும்​பிய சில பக்தர்கள் நிலச்​சரிவு ஏற்​பட்ட பகு​தி​யில் சிக்​கினர். அவர்​களை மாநில பேரிடர் மீட்பு குழு​வினர் பாது​காப்​பாக மீட்டு சோன்​பிர​யாக் அழைத்​து வந்​தனர்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *