பெங்களூரு, ஜூலை 3 ‘உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவை யில் உள்ள நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம்’ என்று கருநாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
மேகதாது திட்டம்
கருநாடகத்தில் பெங்களூரு, ராமநகர் உள்பட 5 மாவட்டங்களில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கவும், நீர்மின் நிலையம் மூலம் மின்சார உற்பத்தி செய்யும் நோக்கிலும், உபரி நீர் வீணாகாமல் தடுக்கவும், ராம நகர் மாவட்டம் மேகதாது எனும் இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கருநாடக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த திட்டத்திற்காக மாநில அரசு ஏற்கனவே ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. மேலும் அணை கட்ட ஒப்புதலுக்காக ஒன்றிய அரசிடம் முறையிட்டுள்ளது. ஆனால் இந்த அணை கட் டப்பட கூடாது என்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் உச்ச நீதிமன்றத்திலும் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது.
284 டி.எம்.சி. நீர்
இது ஒருபுறம் இருக்க கருநாடக அரசு சத்தமின்றி மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அங்கு அணையின் நீர்த்தேக்க பகுதிக்கான நிலத்தை கணக்கிடும் பணி முடிந்துள்ளது. மேலும் அந்த நிலங்களை கையகப்படுத்தும் பணியும் தொடங்கப்பட்டு இருப் பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ராமநகரில் இதற்கென அலுவலகம் ஒன்றை திறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது
இதுகுறித்து கருநாடக முதமைமச்சர் சித்தராமையா கூறுகையில், ‘காவிரி தீர்ப்பாயத்தின்படி ஆண்டுக்கு கரு நாடகத்துக்கு காவிரியில் பங்கான 284 டி. எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) நீரை முழுமையாக பயன்படுத்துகிறோம்’ என்றார்.
அடிப்படைப் பணிகளை
தொடங்கி விட்டோம்
இதுகுறித்து துணை முதலமைச் சரும், துறையை தன்வசம் வைத் திருப்பவருமான டி.கே.சிவக்குமார் கூறுகையில், ‘கருநாடகத்தில் தற்போது விவசாய நிலம் 6 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கபினி அணையில் இருந்து பெறப்படும் உபரி நீரால் பாசன பகுதியில் விவசாயம் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம்’ என்றார்.