திருச்சி, ஜூலை 3- திருச்சி மாவட்ட பூப்பந்தாட்டக் கழகமும், மணவை பூப்பந்தாட்டக் கழகமும் இணைந்து நடத்திய மாணவிகளுக்கான, மாவட்ட அளவிலான பூப்பந்தாட்டப் போட்டி கடந்த 15.06.2025 அன்று, மணப்பாறை, தியாகேசர் ஆலை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் எஸ்.எஸ்.சிறீகிருத்திகா, ஜே.ஆக்னஸ்மேரி, கே.ஜோவிதா,
எஸ்.சிறீமதி, ஆர்.தியா,
எம்.ஹர்ஷிதா,
எம்.கனிஷ்கா, வி.யாழினி, எஸ்.தீக்ஷா,
ஆர்.வைஷ்ணவி உள்ளிட் டோர் பங்கேற்ற அணி மாவட்ட அளவில் நான்காம் இடம் பிடித்து சாதனை படைத்தது.
இதில், எட்டாம் வகுப்பு மாணவி எஸ்.சிறீமதி திருச்சி மாவட்டத்தின் சார்பில் இம்மாதக் கடைசியில் நடைபெற உள்ள மாநில அளவிலான பூப்பந் தாட்டப் போட்டியில் திருச்சி மாவட்டம் சார்பில் பங்கேற்க உள்ள அணியில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.