புதுடில்லி, ஜூலை 3- ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில், உரத் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான ஊடகச் செய்திகளை சுட்டிக்காட்டி. நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
முதுகெலும்பு!
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்தியா ஒரு விவசாய நாடு. விவ சாயிகள்தான் பொருளாதாரத்தின் முது கெலும்பு. ஆனால் அந்த முதுகெலும்பு, வெளிநாட்டை சார்ந்து வளைந்து கொண்டிருக்கிறது.
இந்தியா, 80 சதவீத சிறப்பு உரங்களை சீனாவிடம் இருந்து இறக்கு மதி செய்து வருகிறது. தற்போது, அந்த உர விநியோகத்தை சீனா நிறுத்தி விட்டது.
சீனா எந்த நேரத்திலும் விநியோகத்தை நிறுத்தும் என்று தெரிந்தும், ஒன்றிய அரசு எந்த முன்னேற்பாடு களையும் செய்யவில்லை. உள்நாட்டு உர உற்பத்தியை ஊக்குவிக்கவேண்டிய தேவை இருந்தபோதிலும், அதற்கென எந்த திட்டத்தையும் கொண்டு வர வில்லை.
தற்போது, டி.ஏ.பி., யூரியா போன்ற அத்தியாவசிய உரங்கள் தட்டுப்பாட்டால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். இது முதல்முறை அல்ல. அவர்களுக்கு உதவ ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒருபுறம், பிரதமர் மோடி உர மூட்டையில் தனது புகைப்படத்தை அச்சிட்டுக் கொள்கிறார். மறுபுறம், விவசாயிகள் உரத்துக்கு ‘மேட் இன் சீனா’வை சார்ந்திருக்க வேண்டி உள்ளது. தங்கள் சொந்த மண்ணிலேயே அவர்கள் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டுமா?
‘‘இது யாருக்கான வளர்ச்சி?’’
விலை மதிக்கமுடியாத நேரத்தை யும், நல்ல சாகுபடியையும் இழந்து விட்டு, தற்போது விவசாயிகள் ‘‘இது யாருக்கான வளர்ச்சி?’’ என்று கேட்கி றார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.