சென்னை, ஜூன் 18 டிஎன்பிஎஸ்சி குருப் 4 காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளார் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கரோனாவால் 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்த முடியவில்லை. இந்நிலை யில், 3 ஆண்டுகள் கழித்து, 2022ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி இதற்கான தேர்வுகள் நடத்தப் பட்டு, கடந்த மார்ச் 24ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டன.
இதற்கான காலிப் பணி இடங்கள் 10,117 என்று தேர் வாணையம் அறிவித்துள்ளது. 3 ஆண்டுகள் தேர்வுகள் நடத்தப் படாத நிலையை கவனத்தில் கொண்டு, பறிபோன 30,000 பேருக்கான வேலைவாய்ப்புகளை யும் இணைத்து, அவைகளுக்கான தேர்வையும், கலந்தாய்வையும் இந்த ஆண்டிலேயே நடத்தி அவர் களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.