திருச்சி, ஜூலை 1- திருச்சி மாவட்ட கழக மகளிரணி,மகளிர் பாசறை, சார்பில் பூலாங்குடி பாரத் நகரில் மாவட்ட மகளிரணி தலைவர் ரெஜினா பால்ராஜ் இல்லத்தில், கலந்துரையாடல் கூட்டம் குடும்ப விழாவாக காலை11.30 மணிக்கு நடைபெற்றது.
மாவட்ட மகளிர் அணி செயலாளர் சு.சாந்திசுரேஷ் வவேற் புரையாற்ற, மாவட்ட மகளிரணி தலைவர் பா.ரெஜினா பால்ராஜ் தலைமையேற்றார்.
மாவட்ட தலைவர் ஞா.ஆரோக் கியராஜ், மாநில மகளிர் பாசறை துணை செயலாளர் அ.அம்பிகா கணேசன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் எஸ்..ரூபியா ஸ்டாலின், மாவட்ட மகளிர் பாசறை செய லாளர் த.சங்கீதா தமிழ்மணி ஆகி யோர் முன்னிலையேற்றனர்.
பெரியார் பிஞ்சுகளான காவ்யா ராமதாஸ். தமிழாளன் ராஜசேகர். பெரியாரை பற்றி பேசி அனைவரின் பாராட்டையும் பெற்றதோடு, ஓசூர் மாவட்ட தலைவர் வனவேந்தனால் சிறப்பு செய்ய பட்டார்கள்.
மாவட்ட தலைவரின் வழிகாட்டு தலோடு மகளிரால் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எதிர்வரும் காலங்களில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் கலந்துரையாடல் ஒவ்வொரு தோழர்கள் வீட்டிலும் கூட்டம் நடைபெறும் என்றும்,
பெரியார் பிஞ்சு சந்தாவினை வசூல் செய்வது என்றும்,
தெருமுனை பிரச்சார கூட்டங் களை மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதிகளில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நடத்துவது என்றும்,
சிறுகனூரில் அமைய இருக்கின்ற பெரியார் உலகத்திற்கு மாவட்ட கழகத்தோடு இணைந்து மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் நிதியினை வசூல் செய்து கொடுப்பது என்றும்,
அடுத்த மாதம் குடும்ப விழா வோடு பெரியார் பிஞ்சுகளுக்கான நிகழ்ச்சியினை சிறப்பாக திருச்சி பெரியார் மாளிகையில் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
திராவிடர் கழக மகளிரணி உறுப்பினர் இசபெல்லா நன்றியுரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட தலைவர்.ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட மகளிர் அணி தலைவர் ரெஜினா பால்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் சங்கிலி முத்து.கவுரி, யோகானந், நிர்மலா, வெற்றி மணி, விஜயா மாரியப்பன்,அம்மணி அம்மாள், அம்பிகா கணேசன், வ.ராமதாஸ், திருச்சி மாநகர தலைவர் சங்கீதா தமிழ்மணி சாந்தி சுரேஷ், வசந்தி சேவியர், அமுதா குணசேகரன், பேபி ராமதாஸ். ரூபியாஸ்டாலின், புனிதவதி, இசபெல்லா பேராசிரியர் புனிதாவில்வம், தவமணி ராஜசேகர், பெல்.ஆறுமுகம், ராஜசேகர் மாவட்ட துணைச் செயலாளர் தமிழ் சுடர், திருவரம்பூர் ஒன்றிய செயலாளர் கோ.கருணாநிதி, பூலாங்குடி காலனி செயலாளர் பால்ராஜ், பூலாங்குடி காலனி தலைவர் ரெ.காமராஜ், காட்டூர் கிளைக் கழக தலைவர், சு.வனவேந்தன் (ஓசூர்) மாவட்டத் தலைவர், விடுதலை கிருஷ்ணன் நெல்சன், அசோக்குமார் பெல் திராவிட தொழிலாளர் கழக தலைவர், சிவானந்தம் திருவரம்பூர் நகரத் தலைவர், அந்தோணிராஜ், ஜெயில் கார்னர் பகுதி செயலாளர் சி.கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்டாலின். க.யாழினி மாவட்ட மாணவர் கழக செயலாளர், அறிவுச்செல்வன் மாணவர் கழக அமைப்பாளர், கியூபா வில்வம். அனுஜா, அன்பு, லதா, தமிழ்கவி, யாழ் கண்மணி, காவ்யா தமிழரசன். இரணியன், டார்வின், தமிழாளன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித் தனர். கூட்ட முடிவில் ரெஜினா பால்ராஜ் மதிய உணவு வழங்கினார்.
முடிவில் 40 நாற்பது மகளிர் அணி, மகளிர் பாசறை திராவிடர் கழகத் தோழர்கள் அனைவரும் ஊர்வலமாக சென்று பூலாங்குடி காலனியில் கழக கொடியை ஏற்றி வைத்து முழக்கமிட்டனர்.