‘மதம்’ பிடித்தால் ஆபத்தே!
அகமதாபாத், ஜூன் 27 ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டம் போன்றே குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நடந்துவருகிறது.
குஜராத்தில் நடந்த ரதயாத்திரையின் போது ராஜஸ்தானில் இருந்து மூன்று யானைகள் கொண்டுவரப்பட்டது. காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த யானை திடீரென பெருங்கூட்டத்தைப் பார்த்ததும் பாகனின் கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்குள் மிரண்டு ஓடியது இதில் 4க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.