மராட்டியத்தில் ஹிந்தி எதிர்ப்புத் தீ – மாறி மாறிப் பேசும் முதலமைச்சர்

viduthalai
3 Min Read

மும்பை, ஜூன் 26 மகாராட்டி ராவில் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் ஹிந்தி கட்டாயம் என்ற தனது முடிவை கடுமையான எதிர்ப்பை அடுத்து மூன்றாவது முறையாக நிறுத்தி வைத்துள்ளது.

முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் 17.06.2025 அன்று மாநில அரசு அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஹிந்தியை மூன்றாவது மொழியாக அறிமுகப்படுத்துவது குறித்து ‘இலக் கிய பிரமுகர்கள், மொழி நிபுணர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் ஆலோசனை’ நடத்திய பிறகு மட்டுமே ‘இறுதி முடிவு’ எடுக்கப் படும் என முதலமைச்சர் அலுவ லகம் அறிவித்துள்ளது.

மகாராட்டிரா அரசின் ஹிந்தி மூன்றாவது மொழியாக அறி முகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு வலுத்து வந்தது. மும்பை நகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் ஷிவசேனா (ஷிண்டே) ஆகியவற்றுடன் கூட்டணி வைத்திருக்கும் மகாராட்டிரா நவநிர்மாண் சேனா (MNS) இந்த முடிவை கடுமையாக எதிர்த்தது.

மறைமுகத் திணிப்பு

மாணவர்களுக்கு 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு மொழியை தேர்ந்தெடுத்தால், அவர்களுக்கு விருப்பமான மூன் றாவது மொழியை பயில வாய்ப்பு வழங்கப்பட்டாலும், எதிர்க்கட்சிகள் இந்த முடிவை ‘பாஜக ஹிந்தியை மறைமுகமாக திணிக்கும் முயற்சி’ என விமர்சித்தன.

இந்த விவகாரம் மேலும் எதிர்ப்புகளை தூண்டியுள்ளது. 2021-இல் மாநில விருது பெற்ற கவிஞர் ஹேமந்த் திவாடே, ஹிந்தியை ‘திணிப்பதற்கு’ எதிர்ப்பு தெரிவித்து தனது விருதை திருப்பி அளிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இது மூன்றாவது முறையாக மாநில அரசு ஹிந்தி மூன்றாவது மொழியாக அறிமுகப்படுத்தும் முடிவை மறுபரிசீலனை செய் கிறது. ஜனவரி மாதம் புதிய கல்வி கொள்கையின் கீழ் மகாராட்டிரா அரசு ஹிந்தி மொழியை பள்ளிகளில் கட்டாயம் சேர்க்கும் என்று கூறியிருந்தது,

இதற்கு மகாராட்டிரா முழு வதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. உடனே தற்போது பேச்சுவார்த்தையில் உள்ளது, மொழி நிபுனர்களை கலந்தாலோசித்து மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசு முடிவெடுக்கும் என்று கூறியது

அதன் பிறகு அமைதியாக இருந்த முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் சரியாக பள்ளி துவங்கும் போது (ஏப்ரல் மாதம்), மாநில அரசு ஒரு அரசாணை (GR) வெளியிட்டு, 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹிந்தி மூன்றாவது மொழியாக கட்டாயமாக்கப்படும் என அறிவித்தது.

கடுமையான எதிர்ப்பு அலை

இதனை அடுத்து மகாராட்டிர மக்களிடையே கடுமையான எதிர்ப்பலை எழுந்தது, அத்தோடு அல்லாமல் மகாராட்டிர அரசின் மராட்டி மொழி வளர்ச்சி குழுமத் தின் தலைவரும் தனது கண்டத்தை தெரிவித்தார் இதனைத் தொடர்ந்து, அந்த முடிவு நிறுத்தப்பட்டது. பின்னர், ஜூன் 17 அன்று, மாநில அரசு மாற்றியமைக்கப்பட்ட அரசா ணையை வெளியிட்டு, ஹிந்திக்கு ‘கட்டாயம்’ என்ற வார்த்தையை நீக்கி, 20 மாணவர்கள் ஒரு மொழியை தேர்ந்தெடுத்தால் வேறு மொழியை தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்கியது.

அப்படி இல்லை என்றால் ஹிந்தி அங்கு இருக்கும் என்று புதுக்கதை விட்டது, மராட்டியத்தில் தெற்கு மற்றும் கிழக்கு எல்லையில் உள்ள சில மாவட்டங்களில் மட்டுமே கன்னடம் மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் உள்ளனர். தற்போது கருநாடகத்தில் மராட்டி தொடர்பான மோதல் எழுந்துவருவதால் மராட்டிய எல்லை மாநிலத்தில் கன்னடம் கற்பிக்கப்படுவதில்லை.

அதேபோல் தெலுங்கு மொழியும்  மும்பை புனேவில் உள்ள சில பள்ளிகளில் பயிற்றுவிக்கும் தமிழ் மொழியும் நிறுத்தபப்ட்டு விட்டது. உருது மீடியங்களில் ஹிந்தி ஆங்கிலம் உள்ளது. அப்படி இருக்க 20 மாணவர்கள் கன்னடம் படிக்கவும் தெலுங்கு படிக்கவும் தமிழ் படிக்கவும் விருப்பம் தெரிவித்தால் ஆசிரியர்களை எப்படி நியமிப்பார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆகையால் மகாராட்டிரா அரசின் விருப்பட்டால் வேறு மொழி கற்றுகொடுக்கப்படும் அப்படி இல்லாத பட்சத்தில் ஹிந்தியே மூன்றாவது மொழியாக இருக்கும் என்று புதிய அறிவிப்பு வெறும் கண் துடைப்பு ஹிந்தித் திணிப்பை மேற்கொள்வதற்கு புதிய திட்டம் என்று மராட்டிய மொழி ஆர்வர்ல்ர்களும் மக்களும் கூறி கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கவே மூன்றாவது முறையாக கட்டாய ஹிந்தி திணிப்பை தள்ளிவைத்துள்ளது.

இந்த நிலையில் மகாராட்டிரா பள்ளிக்கல்வித்துறை ஹிந்தி பாடப்புத்தங்களை முழுமையாக அச்சடித்து வைத்துள்ளது. பெரும் பாலான மாணவர்களுக்கு விநியோ கமும் செய்துவிட்டது. ஆகவே விரைவில் ஹிந்தியை திணித்தே தீரூவார்கள் என்று உத்தவ்தாக்கரே சிவசேனா எச்சரித்துள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *