சிதம்பரம், ஜூன் 20- அண்ணாமலைப் பல்கலைக் கழக மேனாள் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் பேராசிரியர் ஆறு.அழகப்பன் எழுதிய ஏழு நூல்கள் வெளியீட்டு விழா 11.6.2023 ஞாயிறு மாலை ஏழு மணியளவில், சென்னை அண்ணா சாலை அன்பகத்தில் நடை பெற்றது.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன் தலைமையேற்று நூல்கள் மதிப்பீடு செய்து உரையாற்றினார்.
தி.மு.க. செய்தித் தொடர்பாளரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார். தகைசால் மாணவர்கள் மூவர் பாராட்டப்பட்டனர். அவர்களில் ஒருவரான சிதம்பரம் மாவட்ட கழக தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன் ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியை வ.மு.சே. திருவள்ளுவன் தொகுத்தளித்தார். தமிழ்ப் பேராசிரியர்களும், தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். இறுதியில் முனை வர் ஆறு.அழகப்பன் நன்றி கூறினார்.