புதுக்கோட்டை, ஜூன் 24 புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக மேனாள் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடானது. அதிமுக என்ற பெயர் வைத்து கொள்வதற்கே தகுதியற்றவர்கள். திராவிடத்திற்கு எதிராகத்தான் மாநாட்டை நடத்தியுள்ளனர். இந்து சமய அறநிலையத் துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களே இருந்திருக்காது. பவன் கல்யாண் போல் இரட்டை வேடம் போடுபவர்கள் நாங்கள் அல்ல. பவன் கல்யாண் ஆந்திராவில் அரசியல் செய்யட்டும் இங்கு எடுபடாது என்றார்.