நியூயார்க், ஜூன் 22- கடந்த 9 நாட்களாக இஸ்ரேல் ஈரான் தாக்குதல் நடந்து வந்த நிலையில் தீடீரென அமெரிக்கா ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியானது.
தோல்வி
இது உலகையே அதிரச் செய்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிந்ததாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அமெரிக்காவில் முன்னணி செய்தி நிறுவனமாக பாக்ஸ் நியூஸ் தளத்திற்கு பேட்டி அளித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்ட ஈரானின் முக்கிய அணு ஆயுதத் தளங்களான ஃபோர்டோ, நடான்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் மீதான தாக்குதல்கள் அந்த இலக்குகளை முழுமையாக அழிக்கத் தவறிவிட்டதாக கூறினார்
ஏவுகணைத் தாக்குதல்
இந்த தாக்குதல்கள் ஜூன் 21, 2025 அன்று அமெரிக்காவின் B-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்து 30,000 பவுண்டு எடையுள்ள “பங்கர் பஸ்டர்” குண்டுகள் மற்றும் டோமஹாக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்டன.
பாதிப்பில்லை
ட்ரம்ப் இந்த தாக்குதல்களை “மிகச்சிறந்த இராணுவ வெற்றி” என்று அறிவித்து, ஈரானின் அணு ஆயுத உற்பத்தி திறனை முற்றிலும் அழித்துவிட்டதாக கூறினார்.
ஆனால், ஈரானிய ஊடகங்கள், தாக்குதலுக்கு முன்பே இந்த தளங்களிலிருந்து மதிப்புமிக்க பொருட்கள் அகற்றப்பட்டதாகவும், தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளன.
இந்த நிலையில் ஈரானின் இந்தகூற்றை ஒப்புக்கொண்ட, அமெரிக்க அதிகாரிகள், இந்த தாக்குதல்கள் இலக்கு வைக்கப்பட்ட அணு தளங்களை முழுமையாக அழிக்கவில்லை என்று கூறியுள்ளனர்
ஈரானின் அணு ஆயுத திட்டத்தை தடுப்பதற்காக இஸ்ரேலுடன் இணைந்து மேற் கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்கள், பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளன.
ஈரான் இந்த தாக்குதல்களை பன்னாட்டு சட்டங்களுக்கு எதிரானவை என்று கண்டித்துள்ளது, மேலும் பதிலடி தாக்குதல்களை நடத்துவதாக எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், தாக்குதல்களின் உண்மையான தாக்கம் மற்றும் அணு தளங்களின் நிலை குறித்து பன்னாட்டு அணு ஆயுத ஆய்வு முகமை (IAEA) மற்றும் பிற சான்றுகள் குறித்து இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.