புதுடில்லி, ஜூன் 20 அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்களுக்கு விசா வழங்கும் செயல்முறை கடந்த மே மாதம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை யடுத்து, மாணவர்கள் விசா பெறுவ தற்கான நேர்காணல் விரைவில் தொடங் கும். ஆனால், விண்ணப்பதாரர்கள் தங்களது சமூக ஊடக கணக்குகளை பொது என்ற வகைமையில் அமைத்து மதிப் பாய்வு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு உடன்பட மறுக்கும் மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படலாம். அமெரிக்கா மற்றும் அதன் அரசாங்கம், கலாச்சாரம், நிறுவனங்கள் அல்லது நிறு வனக் கொள்கைகளை விரோதமாக கருதக் கூடிய மாணவர்களின் பதிவுகள் மற்றும் செய்திகளை தூதரக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். இவ்வாறு வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.