உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில், பாறைகள் உருண்டு வந்து பக்தர்கள், டோலி தூக்குவோர் மீது விழுந்தன. இதில் காஷ்மீரை சேர்ந்த டோலி தூக்கும் தொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர். கேதர்நாத்துக்கு செல்லும் பக்தர்கள் வானிலையை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல பயணத்தை திட்டமிட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாம்.