அகமதாபாத், ஜூன்.19- அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 208 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வெளிநாட்டினர் உள்பட 170 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப் படைக்கப்பட்டுள்ளன.
டி.என்.ஏ. சோதனை
கடந்த 12-ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப் பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில், விமானத்தில் பயணம் செய்த 241 பேரும், விபத்து பகுதியில் இருந்த 29 பேரும் உயிரிழந்தனர்.
அவர்களின் உடல்கள் தீயில் கருகியும், சிதைந்தும் அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்ததால், டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டது.
உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ. மாதிரியும், குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட டி. என்.ஏ. மாதிரியும் ஒப்பிட்டுப் பார்த்து சோதனை செய்யப்பட்டன.
170 பேர் உடல்கள் ஒப்படைப்பு
இதுவரை, 208 பேர் உடல்களின் டி.என்.ஏ. மாதிரிகள் பொருந்தி இருந்ததால், அந்த உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில், 170 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப் படைக்கப்பட்டன.
ஒப்படைக்கப்பட்ட உடல்களில், 4 போர்ச்சுக் கீசியர்களின் உடல்களும், 30 இங்கிலாந்து நாட்டினரின் உடல்களும், ஒரு கனடா நாட்டை சேர்ந்தவரின் உடலும் அடங்கும்.
டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்களை அடை யாளம் காணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்று அகமதா பாத் சிவில் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.