நியூயார்க், ஜூன் 23 – பிரதமர் நரேந்திர மோடியை, “கிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா”,(Crime Minister of India) என விமர்சிக்கும், ‘டிஜிட்டல் டிரக்’, அமெரிக்காவின் நியூயார்க் நகர முக்கியச் சாலைகளில் வலம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க், வாசிங்டன் நகரங்களில் சுற்றுப் பயணம் செய்து, அமெரிக்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் நேரத்தில், அவரை ‘இந்தியாவின் குற்ற அமைச்சர்’ என குறிப்பிட்டு, பகிரங்கமாக நடைபெற்று வரும் டிஜிட்டல் டிரக் பிரச் சாரம் பாஜக-வினரை அதிர்ச் சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
இந்தியாவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், கருத்துச் சுதந்திரம், மதச் சுதந்திரம் பறிப்பு போன்றவை குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என அதிபர் ஜோபைடனுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த செனட்டர்கள் உட்பட அமெ ரிக்க நாடாளுமன்ற உறுப்பி னர்கள் 75 பேர், ஏற்கெனவே கடிதம் எழுதியிருந்தனர்.
அமெரிக்க செனட்டர் கிரிஸ் வான் ஹோ லென் மற்றும் அதன் பிரதிநிதி பிர மிளா ஜெய பால் தலைமையிலான இந்த குழுவில், ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலுக்கான வேட் பாளர் போட்டியில் இருக்கும் பெர்னீ சாண்டர்ஸ், எலிசபெத் வாரன் உட்பட 18 செனட் டர்கள் (மேலவை உறுப்பினர்கள்), 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கடிதத் தில் கையெழுத்திட்டு இருந் தனர்.
இதனிடையே, இந்தியாவில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், சிறுபான்மையினர் மீதான தாக்கு தல்கள், மதவாத மோதல்கள், இணையதள முடக்கம், கருத்துச் சுதந்திரம் பறிப்பு, பத்திரி கைச் சுதந்திர பறிப்பு, மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் போன்ற பல்வேறு ஒடுக்கு முறைகளைச் சுட்டிக்காட்டி, நியூயார்க் நகரில், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக டிஜிட்டல் டிரக் மூலமும் பிரச்சாரம் முன்னெடுக்கப் பட்டு உள்ளது. அமெரிக்காவின் பல்வேறு நிறு வனங்கள், அரசியல் தலைவர்கள், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப் பயன் படுத்தும் இந்த டிரக் நியூயார்க் நகரில் மிகவும் பிரபலமாகும். அந்த வகையில், அமெரிக்க ஜனநாயக சிந்தனையாளர்கள் மற்றும் சமூக செயற்பாட் டாளர்களும் இந்த டிஜிட்டல் வாகனப் பிரச்சாரத்தை முன் னெடுத்து மோடிக்கு எதிர்ப் பைத் தெரிவித்துள்ளனர்.
“கிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா” என எழுதப்பட்ட டிஜிட்டல் திரையுடன் நியூயார்க் நகர முக்கியச் சாலை களில் வலம்வரும், இந்த டிஜிட்டல் திரையுடன் கூடிய டிரக், இந்தியாவில் “ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் -வீராங்கனைகள் ஏன் போராட்டம் நடத்துகின்றனர்? 2005 முதல் 2014 வரை பிரதமர் மோடி, ஏன், அமெரிக்காவிற்கு வரத் தடை விதிக்கப்பட்டது? எந்த விசாரணையும் இல் லாமல் ஏன், மாணவர் அமைப்பின் தலைவர் உமர் காலித் 1000 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்?” என பல்வேறு கேள்விகளையும் பிரதமர் மோடிக்கு முன்வைத்துள்ளது.
இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர் களுக்கு எதி ரான தாக்குதல்களை கண்டித்து வெள்ளை மாளிகை இரவு விருந்தில் பங் கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விடுத்த அழைப்பை அமெரிக்க அதிபர் ஜோபை டன் திரும்பப்பெற வலியு றுத்தி, ‘இந்தியன் – அமெ ரிக்கன் முஸ்லிம் கவுன்சில்’ என்ற அமைப்பும் அமெரிக் காவில் கையெழுத்து இயக் கத்தை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.