தெலங்கானாவிலும் ஹிந்தி எதிர்ப்புக் குரல்!

2 Min Read

இந்தியா


அய்தராபாத், ஜூன் 24
– “நாங்கள் ஹிந்திப் பாடல்களை விருப்பமிருந் தால் கேட்போம் ஹிந்தியைத் திணிக்க முயன்றால் உயிரைக் கொடுத்தேனும் நாங்கள் எதிர்ப் போம்” என்று தெலங்கானா மாநில முதலமைச்சரின் மகள் கவிதா ஒன்றிய அரசை எச்சரித்துள்ளார்

ஹிந்தி பேசாத மாநிலங்களின் மீது மொழியைத் திணிக்கும் அனைத்து முயற்சிகளையும் எதிர்ப்போம் என்று ஒன்றிய அரசை தெலங்கானா முதலமைச் சர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், தெலங்கானா சட்டமேலவை உறுப்பினருமான கே. கவிதா எச்சரித்தார். அய்தராபாத்தில் உள்ள தெலங்கானா சரஸ்வத பரி ஷத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கே.கவிதா பேசுகையில் கூறியதாவது: 

ஹிந்திப் பாடல்களில் வசீ கரிக்கும் வார்த்தைகள் உள்ளன; ஹிந்தி கதைகளைப் படிக்க நன் றாக இருக்கும் 

ஆனால் அந்த மொழியை நம் மீது திணிக்க விதிகள் அமைக்கப் பட்டால், நாம் விதிகளை மீறு வோம்! எந்தவொரு மொழியையும் மக்கள் மீது தணிப்பது எதிர்க்கப் பட வேண்டும். தெலங்கானாவின் வரையறுக்கப்பட்ட கண்ணோட் டத்தில் இருந்து இந்தியத்தன்மை யின் பரந்த கண்ணோட்டத்திற்கு நாம் பயணிக்க வேண்டும். தெலங் கானா எழுச்சி அதன் ஒரு பகுதி யாக பாரத விழிப்பாக மாற்றப் பட்டது. 

சமீபகாலமாக தெலங்கானா மாநிலத்தில் ஒன்றிய அரசு அதிகம் ஹிந்தி மொழிப்பயன்பாட்டை அதிகரித்துள்ளது, அய்தராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நவாப் காலம் தொட்டே உருது மொழி பேசப்பட்டு வருகி றது. தெலுங்கு உருது ஆங்கிலம் தமிழ் என்று தான் இதுவரை இருந்தது. 

 ஆனால் சமீபகாலமாக உருது இடத்தில் ஒன்றிய அரசு ஹிந்தி யைக் கொண்டுவர முயல்கிறது. 

அய்தராபாத் பல்கலைக் கழகத் தில் இருந்து உருது போர்டுகளில் கீழே ஹிந்தி எழுத்துக்கள் இருந் தன; தற்போது ஹிந்தி எழுத்துக்கள் மட்டுமே அங்கு இடம் பெற்று வருகிறது. 

உருதுவும் ஹிந்தியும் கிட்டத் தட்ட ஒரே மாதிரி உச்சரிப்பைக் கொண்டு இருப்பதால் தந்திரமாக ஹிந்தியை அங்கு கொண்டுவந்து பிறகு இவர்கள் பேசும் சமஸ்கிருத ஹிந்தியைத் திணிக்கும் வேலை யைச் செய்கிறது ஆரம்பக் கட் டத்தில் தெலங்கானா மக்கள் இதை புரிந்து கொள்ளவில்லை. ஆனால் சமீபகாலமாக ஒன்றிய அரசின் அனைத்துத் திட்டங்களின் விபரங்களும் ஹிந்தியில் மட்டுமே இருப்பதைக்கண்டு தெலுங்கானா மக்கள் எச்சரிக்கையோடு இருக் கத் துவங்கிவிட்டனர். 

 இதன் விளைவுதான் தெலுங்கு மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்கவும், ஹிந்தி எதிர்ப்பைக் காட்டவும் தெலங்கானா மக்கள் கிளம்பிவிட்டனர். இதன் எதி ரொலியாகத்தான் தெலுங்கானா மாநில முதலமைச்சரின் மகள் கவிதா “உயிரைக் கொடுத்தேனும் ஹிந்தித் திணிப்பை விரட்டுவோம்” என்று கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *