திருவண்ணாமலை, ஜூன்.4– திருவண்ணாமலை மேற்கு காவல்துறையினர் கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாதுக்களிடம் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாதுக்களிடம் அடையாள அட்டை உள்ளதா, தேவையற்ற நபர்கள் மற்றும் சந்தேகத்திற்கு உரிய நபர்கள் எவரேனும் தங்கியுள்ளனரா என்பது குறித்து கேட்டறிந்து விசாரணை நடத்தினர். அப்போது கிரிவலப்பாதையில் அத்தியந்தல் பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தின் அருகில் காவி உடை அணிந்து இருந்த நபரை காவல்துறையினர் சோதனை செய்ய சென்றனர். அந்தநபர் காவல்துறையினர் வருவதை கண்டதும் பையை கீழே போட்டு விட்டு தப்பியோடி விட்டார். பின்னர் காவல்துறையினர் அவரது பையை கைப்பற்றி சோதனை செய்து பார்த்த போது அதில் 250 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.’
இதையடுத்து காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்து தப்பியோடிய சாமியார் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணை யில் அவர் கோவையை சேர்ந்த மவுனி மாயமூலன் என்பது தெரியவந்தது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாமியாரிடம் கஞ்சா பறிமுதல்
Leave a Comment