எண்ணூர், ஜூன் 4 – எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் (2.6.2025) இரவு அடையாளம் தெரியாத நபர் இந்த கோவில் சுவரை ஏறி குதித்து அம்மன் கழுத்தில் இருந்த முக்கால் பவுன் தாலியையும், உண்டியலையும் உடைத்து அதில் இருந்த பணத்தையும் திருடிச் சென்றார். நேற்று (3.6.2025) காலை கோவில் பூசாரி வந்து திறந்து பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த தாலி மற்றும் உண்டியல் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் எண்ணூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் காவல்துறையினர் கோவிலுக்கு வந்து சோதனை செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அடையாள தெரியாத நபரை தேடி வருகின்றனர்.