கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி செம்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் தலைமையில் தயாரிக்கப்பட்ட ‘‘எல்லோர்க்கும் எல்லாமும் மாய்’’ என்ற தலைப்பில் கலைஞர் குறித்த ஆவணப் படம் திரையி டப்பட்டன. அதில் கலைஞரின் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள் மற்றும் அவர் எந்த அடிப் படையில் அந்த திட்டத்தை தொடங் கினார் என்பது குறித்து விரிவாக எடுத்து சொல்லப்பட்டு இருந்தது.
உதாரணமாக கலைஞருக்கு மிகவும் பழக்கமான ஓர் அதிகாரிக்கு உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு ரூ.15 லட்சம் பில் வந்தது. அவரால் அதனை கட்ட முடியவில்லை. உடனே முதலமைச்சராக இருந்த கலைஞர் அரசு சார்பில் அந்த தொகையை கட்டுவதற்கு உத்தரவிட்டார். அப்போது அவர் அதிகாரிகளிடம், உயர் அதிகாரியான அவராலேயே பில் கட்ட முடியவில்லை என்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேரும் சாதாரண மக்கள் எப்படி கட்டுவார்கள்?. எனவே மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் மருத்துவக் காப்பீட்டு திட்டம் தொடங்க வேண்டும் என்று கூறி தொடங்கினார் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
கலைஞர் ஏன் மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டு வந்தார்? ஆவணப்படம் விளக்கம்

Leave a Comment