‘விடுதலை’க்கு நிகர் உண்டோ!

viduthalai
5 Min Read

‘விடுதலை’ ஏடு வாரம் இருமுறை ஏடாக ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் ஏ.வி. நாதன் அவர்களை அதிகாரபூர்வ ஆசிரியராகக் கொண்டு அரையணா விலையில் 1-6-1935 முதல் 14 மவுண்ட் ரோட், மதராஸ் என்ற முகவரியிலியிருந்து வெளிவந்தது  (ஆதாரம்:
7-6-1935 – “குடிஅரசு”) வருட சந்தர 3–10–0

அதன்பின் 1-4-1937 முதல் அதே முகவரியில் பண்டிதர் எஸ்.முத்துசாமி பிள்ளை அவர்களை அதிகாரப் பூர்வ ஆசிரியராகக் கொண்டு நாளேடாக காலணா விலையில் வெளி வந்தது.  (ஆதாரம்:
‘குடி அரசு’ 10-1-1937)

1937 முதல் விடுதலை’ நாளேடு காலணா விலையில் அவரையே ஆசிரியராகக் கொண்டு ஈரோட்டிலிருந்து வெளிவந்தது.  (ஆதாரம்: ‘குடிஅரசு’ 3-1–1937)

1939-இல் அண்ணா அவர்கள் விடுதலை’ ஏட்டின் பொறுப்பாசிரியராக இருந்து, அதன் பின்
21-12-1941-இல் அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார்.

‘விடுதலை’எட்டில் வந்த ஒரு கட்டுரைக்காக 124 எ. பிரிவின்படியும் ‘விடுதலை’ வெளியீட்டாளர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் மீதும், ஆசிரியர் பண்டித முத்துசாமி பிள்ளை மீதும் ராஜகோபாலாச்சாரியார் அரசு வழக்குத் தொடுத்து அதன் காரணமாக இருவரும் 6 மாதச் சிறை தண்டனை விதிக்கப்பட்டனர்.

அதன் காரணமாக அ.பொன்னம்பலனார் ‘விடுதலை’யின் அதிகாரபூர்வ ஆசிரியர் பொறுப்பை   9-1-1939 முதல் ஏற்றுக் கொண்டார்.

‘விடுதலை’ ஏடு யுத்தப் பிரச்சாரத்திற்காக தரப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் ‘குத்தூசி’ குருசாமி அவர்கள் 12.9.1943 முதல் 30.9.1945 வரை பொறுப்பாசிரியராக இருந்தார்.

என். கரிவரதசாமி அதிகாரபூர்வ ஆசிரியராக இருந்தார்.

யுத்த பிரச்சாரத்திற்காக வழங்கப்பட்ட ‘விடுதலை’  மீண்டும் தந்தை பெரி யாரின் பொறுப்புக்கு 6.6.1946 முதல் வந்தது. அதன் அதிகாரப்பூர்வ ஆசிரியராக கே.ஏ. மணி (அன்னை மணியம்மையார்) இருந்தார். தனி இதழ் விலை முக்காலணா, சென்னை, பாலகிருஷ்ணபிள்ளை தெருவிலிருந்து ‘விடுதலை’ வெளியாகத் தொடங்கியது.

20-6-1943 முதல் குத்தூசி குருசாமி ‘விடுதலை’ பொறுப்பாசிரியராக இருந்தார் 2-4-1962 வரை அவர் அப்பொறுப்பில் இருந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் தேதியன்று ‘திராவிட நாடு பிரிவினை நாள்’ கொண்டாடுமாறு தோழர்களுக்கு தந்தை பெரியார் ‘விடுதலை’யில் அறிக்கைவிட்டார்.சென்ளை மாகாண அரசு சும்மா இருக்குமா? ‘விடுதலை’ மீது பாய்ந்தது. ரூ.2000 ‘விடுதலை’க்கு ஜாமீன் கட்டவேண்டும் என்று ஏட்டின் பதிப்பாசிரியரும், வெளியீட்டாளருமாகிய அன்னை மணியம்மையார் அவர்களுக்கு அரசு ஆணை பிறப்பித்தது.

இந்தப் பிரச்சினையை பொது மக்களிடத்தில் தந்தை பெரியார் வைத்தார்! ‘விடுதலை’யின் ஈடு இணையற்ற தொண்டின் அவசியத்தை உணர்த்த பொது மக்களோ ரூ.15,200 அள்ளித் தந்தனர்.

குருசாமி அவர்களைத் தொடர்ந்து கி.வீரமணி அவர்கள் விடுதலை’யின் பொறுப்பாசிரியராக (Executive Editor) இருந்து வந்தார். அன்னை மணியம்மையார் அவர்களது மறைவுக்குப்  பிறகு 24-3-1978 முதல் வீரமணி அவர்கள் அதிகாரபூர்வ ஆசிரியராகவும், பிரசுரதாரராகவும் இருந்து வருகின்றார்.

“விடுதலை”யின் அதிகாரபூர்வ ஆசிரியர்கள்

  1. டி.ஏ.வி. நாதன். 2 பண்டித எஸ் முத்துசாமி பிள்ளை, 3. அ.பொன்னம் பலனார், 4. என். கரிவரதசாமி, 5 கே.ஏ. மணி, (அன்னை மணியம்மையார் அவர்களின் ஆரம்பப் பெயர்), 6. ஈ.வெ.ரா. மணியம்மை (திருமணத்திற்குப் பின்னர் பெயரில் சிறிது மாறுதல்), 7. கி.வீரமணி.

இன்னும் இன்னும் ஏராளமான தகவல்கள் உண்டு விடுதலை’யைப் பற்றி.

தமிழர் பொது வாழ்வில் மகத்தான மாறுதலுக்கான ஆசான் ‘விடுதலை’. இந்த ‘விடுதலை’யின் ஆசான் தந்தை பெரியார்.

‘விடுதலை’யின் மீது எத்தனை எத்தனையோ வழக்குகள் – எதிர்ப்புகள்! அவற்றையெல்லாம் இலட்சிய வெறிகொண்டு துவம்சம் செய்து  ஏறுநடை போட்டு வந்தது –  வந்து கொண்டிருக்கிறது – வந்து கொண்டும் இருக்கும் – இதுதான் ‘விடுதலை’க்கென்று உள்ள ரத்த ஓட்டமாகும்!

பிறவிப் பேதத்தின் ஆணி வேரான வருணாசிரமத்தை  ‘விடுதலை’ எதிர்த்தது.

ஜாதியால் ஒடுக்கப்பட்ட – ஒதுக்கப்பட்ட – தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பொது உரிமைக்காகக் குரல்!

கல்வி வாய்ப்பில் வேலை வாய்ப்பில், இட ஒதுக்கீட்டுக்காக திடமான போராட்டங்கள்.

மக்கள் தொகையில் சரி பகுதியினரான பெண் களுக்காக உரிமைப் பேரிகை!

முட்டித் தள்ளிய மூட நம்பிக்கைகளின் கொம்புகளை முறித்து பகுத்தறிவுப் பூங்கா சமைக்க தொடர் ஓட்டம்.

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் அட்டையாம் முதலாளித்துவத்தின் மூலபலத்திற்கே சென்று சம்மட்டி அடி!

சமதர்மப் பூங்காற்றை உலாவச் செய்ய சலிப்பறியா சங்கநாதம்!

ஒரு துறையல்ல-இரு துறையல்ல – சகல துறைகளிலும் ‘விடுதலை’தான் முத்திரைகளை பொறித்து புது சகாப்தத்தை உருவாக்கியுள்ளது.

அரசுகளின் போக்குகளை மாற்றியுள்ளது. முடிவுகளைத் திருத்தியுள்ளது. ஏன் அரசாங்கங்களையே கூட மாற்றிய வரலாறுகள் ‘விடுதலை’க்கு உண்டு.

பொதுப் பிரச்சினைகளுக்காக வெகு மக்களை ஓரணியில் கொண்டுவந்த சாதனைச் சரித்திரமும் உண்டு.

இந்த 90 ஆண்டுகளில்  ‘விடுதலை’யின் தோற்றம், பல மாறுதலுக்கு ஆளாகியுள்ளது.

‘விடுதலை’யைப் படிப்பதற்கே தனி பயிற்சி தேவை என்கிற காலம் மலையேறி, இன்றைக்கு ‘விடுதலை’ நவீன வசதிகளுடன் தொழில்ரீதியாக நடத்தப்படும் ஏடுகளை புறங்காணும் அளவுக்கு புத்தொளி பாய்ச்சி நிற்கிறது.

ஏ, அப்பா! ‘விடுதலை’யா என்று பலரும் மூக்கின் மேல் விரலை வைக்கின்றனர்.

‘விடுதலை’ வெளியிட்ட  பொங்கல் மலரைக் கண்டு ‘தினமணி’ ‘பொங்கு மலர்’ என்று தலைப்பிட்டு, அதன் நேர்த்தியை நேர்மையுடன் பாராட்டியுள்ளது.

இவ்வாறு சிறப்பு மிக்க, சாதனை மிக்க வரலாற்றில் புகழ்மிக்க ‘விடுதலை’ ஒவ்வொரு தமிழன் கையிலும் இருக்கவேண்டாமா?

போற்றினால் மட்டுமே போதுமா? புகழ்வதால் எல்லாம் நடந்துவிடுமா? வீட்டுக்கு வீடு ‘விடுதலை’ புழங்க வேண்டாமா?

போற்றினால் மட்டுமே போதுமா? புகழ்வதால் எல்லாம் நடந்துவிடுமா? வீட்டுக்கு வீடு ‘விடுதலை’ புழங்க வேண்டாமா? வியாபார கண்ணோட்டத்தோடா ‘விடுதலை’ நடக்கிறது? தமிழர்களின் விடுதலை கண்ணோட்டத்தோடு தானே ‘விடுதலை’ நாளும் பெரியார் பாசறையிலிருந்து புடம் போடப்பட்டு வெளியே வந்து கொண்டிருக்கிறது.

வியாபார கண்ணோட்டத்தோடா ‘விடுதலை’ நடக்கிறது? தமிழர்களின் விடுதலை கண்ணோட்டத்தோடு தானே ‘விடுதலை’ நாளும் பெரியார் பாசறையிலிருந்து புடம் போடப்பட்டு வெளியே வந்து கொண்டிருக்கிறது.

31.10.1965 அன்று மாலை ராகு காலத்தின்  சென்னை பெரியார் திடலில் ‘விடுதலை’ பணிமனையைத் திறந்து வைத்த போது மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்ன கூறினார்?

‘‘தலைவர் பெரியார் அவர்கள்தான் துணிந்து நாட்டில் நல்ல கருத்துகளைத் தோற்றுவிக்க ‘விடுதலை’ யைத் தொடங்கினார்கள். ‘விடுதலை’யின் புரட்சிக் கருத்துகளை வரவேற்க மேல்மட்டத்தில் உள்ளவர்கள் விரும்புவது இல்லை. அடிமட்டத்தில் உள்ளவர்களாவது வரவேற்கின்றார்களா என்றால் அச்சத்தின் காரணமாக மறுக்கிறார்கள். மேல் மட்டத்திற்கும் அடித்தளத்திற்கும் இடையே உள்ள நடுத்தர மக்களாவது வரவேற்கின்றார்களா என்றால், இப்போது தான் அவர்கள் கைக்கு போய்ச் சேர்ந்து கொண்டு இருக்கிறது. தமிழர்களின் நலன் கருதி நடக்கக்கூடிய ‘விடுதலை’யினை தமிழர்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்கவேண்டும். ‘விடுதலை’ வாங்கிப் படிப்பதை தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமையாகக் கருத வேண்டும்.

தமிழர்களின் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகைபோல், ‘விடுதலை’ தமிழரது  ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டும்’’

‘விடுதலை’ பணிமனை திறப்பு விழாவில் தவத்திரு  குன்றக்குடி அடிகளார் இவ்வாறு கூறினார்கள்.

இதற்கு மேலே விளக்கம் தேவையா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *