லக்னோ, மே 31– பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் செல்கிறார். அப்போது 47,573 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவ டைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார். மற்றும் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், நாங்கள் செய்து முடித்த திட்டங்களை பாஜக திறந்து வைப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக ஆட் சிக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன, ஆனால் இப்போது அவர்கள் சமாஜ்வாடி கட்சி செய்த பணிகளைத் தொடங்கி வைக்கிறார்கள். பங்கி தெர்மல் விரிவாக்கம் திட் டம், நெய்வேலி லிக்னைட் மின்நிலையம், கான்பூர் மெட்ரோ போன்றவை சமாஜ்வாடி கட்சியால் செய்து முடிக்கப்பட்டது.
நாங்கள் முடித்த பணிகளை திறந்து வைக்கும் பிரதமர் மோடி அகிலேஷ் யாதவ் கிண்டல்!

Leave a Comment