பாசிசமே, உன் பெயர்தான் பா.ஜ.க.வா? மின்சாரம்

viduthalai
4 Min Read

ஆர்.எஸ்.எஸ். என்றால் கட்டுப்பாடான கட்சி, பா.ஜ.க. என்றால் பாரதத் தாயைக் காக்க வந்த தவக்கொழுந்து என்றெல்லாம் பேசுவதில் மட்டும் குறைச்சல் இல்லை.

ஆனால் நடைமுறையில் ஒழுக்கத்திற்கும், பண்பாட்டுக்கும் அவர்கள் வெகு தொலைவில் இருக்கக் கூடியவர்கள் தான்!

ஓர் ஒழுக்கமான கடவுளைக் கற்பிக்க முடியாதவர்களால், ஒழுக்கமாக எப்படி நடந்து கொள்ள முடியும்?

பெண்கள் என்றாலே விபச்சார தோஷ முள்ளவர்கள் என்று கூறும் மனுதர்மத்தை (மனுதர்மம் அத்தியாயம் 9 சுலோகம் 19) மண்டைக்குள் ஏற்றி வைத்துக் கொண்டவர்கள் பெண்களைக் காமப் பசியாறும் பதுமைகளாகத்தானே பார்ப்பார்கள்.

முற்றும் துறந்த முனிபுங்கவர் என்று மூச்சுக்கு முந்நூறு தடவை போற்றித் துதிபாடப்படும் சங்கராச்சாரியார் மடத்துக்குள் நுழைந்து ‘பரிசுத்தமாக’ வெளிவர முடியாத பெண்கள் எத்தனைப் பேர்? (இந்த நேரத்தில் எழுத்தாளர் அனுராதா ரமணனின் அழுகுரல் நம் காதுகளில் ஒலிக்கத்தான் செய்கிறது.)

பிஜேபி ஆட்சிக்கு வந்தாலும் வந்தது – கோயில் கருவறைகள்கூட பள்ளியறைகளாக மாற்றப்பட்ட நிகழ்வுகள் ஏராளம்!

அதிகாரம் கைக்குள் வந்தது என்றவுடன் கட்டவிழ்த்து விடப்படும் கழிசடைத்தனம் சொல்லிமாளாது.

2017ஆம் ஆண்டு ஒரு கொடூரம் உ.பி.யில்!

17 வயது பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமையை செய்த பேர் வழி பா.ஜ.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார்.

குல்தீப் சிங் செங்கார் 2018 ஏப்ரல் 13 ஆம் தேதி மத்திய புலனாய்வுத் துறையால் (CBI) கைது செய்யப்பட்டார்.

அலகாபாத் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரித்து, அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டது.

2019 டிசம்பர் 16ஆம் தேதி, டில்லி நீதிமன்றம் குல்தீப் சிங் செங்கார் பாலியல் வன்கொடுமை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.

2019 டிசம்பர் 20ஆம் தேதி, அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மரணம்: இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் இறந்த சம்பவத்திலும், குல்தீப் சிங் செங்கார் மீது குற்றம் சாட்டப்பட்டது.

2020 மார்ச் மாதம், அவர் “குற்றவியல் சதி மற்றும் மரணத்திற்கு காரணமான குற்றம்” செய்ததாகக் கண்டறியப்பட்டு, மேலும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார், அது நிலுவையில் உள்ளது.

சமீபத்தில், மருத்துவ காரணங்களுக்காக (கண் அறுவை சிகிச்சை) அவருக்கு தற்காலிக பிணை வழங்கப்பட்டது.

***

இந்த மாதம் ஒரு அருவருக்கத்தக்க நிகழ்வு – எல்லாம் பிஜேபி சம்பந்தப்பட்டதுதான்!

மத்திய பிரதேசத்தில் உள்ள மண்ட்கவுர் பானி பாஜக தலைவர் மனோகர் தாகத். இவரது மனைவியும்,  பாஜக சார்பில் போட்டியிட்டு நகரசபை உறுப்பினராக உள்ளார்.

இவர் டில்லி மும்பை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டு இருக்கும் போது ஒரு பெண்ணை பாலியல்வன்கொடுமை செய்துள்ளார். கார் மெதுவாக சென்ற போது காரைவிட்டு இறங்கி ஓடமுயன்ற அந்தப்பெண்ணை சாலையிலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மே 13ஆம் தேதியன்று இரவு பதிவாகியுள்ளது. டில்லி-மும்பை விரைவுச்சாலையில் இருக்கும் சிசிடிவி கேமராவில்தான் இந்த காணொளி படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற காரில், மனோகர் தாகத் பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக பாலியல்வன்கொடுமை செய்தார். மேலும் அந்த பெண்ணும், உடலில் துணிகள் ஏதும் இல்லாமல் தப்பி ஓடமுடியாமல் தவித்தார்.

பாஜக பிரமுகரின் இந்த அருவருக்கத்தக்க காட்சிப் பதிவானது – கடந்த 2 நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இவரது இந்த செயல், டில்லி-மும்பை விரைவுச்சாலையில் இருக்கும் உயர் பாதுகாப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது. இந்த காட்சிப் பதிவு வைரலானதில் இருந்து, மனோகரின் அலைப்பேசி எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவ்வூரின் காவல்துறையினர் பேசுகையில், இது புதிதாக கட்டப்பட்ட சாலையில் நடந்திருப்பதாகவும், இது போன்ற செயலை யார் செய்தாலும் அது கண்டிக்கத்தக்கது என்றும் கூறினர். இந்த விஷயம் இன்னும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மனோகரின் ஆபாச வீடியோ வைரலான பிறகு, அவர் தனது ஊர் மக்களிடம் இருந்து விலகியே இருப்பதாகவும், கட்சியின் பெரும்புள்ளிகளின் அறிவுறுத்தலின் பேரில் அவரை பதவி நீக்கம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெண் விருப்பப்பட்டே பாஜக தலைவருடன் இருந்ததாக திரிக்கப்பட்டுள்ள நிலையில், இது இந்திய தண்டனப்படி குற்றம் ஆகும். இருப்பினும் இவர் பாஜக தலைவர் ஆகையால் இது வரை இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பாஜக மத்தியப் பிரதேசத்தில் 30 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இதெல்லாம் பிஜேபியில் அதிசயமான நிகழ்வா? குஜராத்தில் நடக்காத அவலமா? பில்கிஸ்பானு என்ற கர்ப்பிணிப் பெண்ணை என்ன பாடுபடுத்தினார்கள்!

தப்பித் தவறி தண்டனை கிடைத்தும் என்ன பலன்? அந்தக் கேவலத்தை நினைத்தாலே நடுநடுங்குகிறது. கொடூரக் காரியத்தில் ஈடுபட்ட கயவர்களை நன்னடத்தை பெயரில் ‘விடுதலை’ செய்தது குஜராத் பிஜேபி அரசுதானே!

உச்சநீதிமன்றம் தலையிட்டுதானே மீண்டும் சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

பாசிசமே, உன் பெயர்தான் பா.ஜ.க.வா?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *