புதுடில்லி, மே.28- அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தினாலோ, வகுப்புகளை தவிர்த்தாலோ மாணவர் விசா ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மாணவர்களுக்கு அதிகமான விசா
அமெரிக்காவில் உள்ள பல்கலைக் கழகங்களில் இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். குறிப்பாக, இந்திய மாணவர்கள் அதிக அளவில் பயின்று வருகி றார்கள். கடந்த 2023-ஆம் ஆண்டு, இந் தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், 1லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு மாணவர் விசா அளித்தது. இது, மற்ற நாட்டு மாணவர்களுக்கு அளித் ததை விட மிகவும் அதிகம். தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்திய மாணவர் களுக்குத்தான் அதிகமான விசா அளிக்கப் பட்டு வருகிறது.
நிபந்தனைகளை பின்பற்றுங்கள்
இந்நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்காவில் உயர் கல்வி படிக்கும் சர்வதேச மாணவர்களுக்கு நேற்று எச்சரிக்கை விடுத்தது.
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-மாணவர் விசா மூலம் அமெரிக்காவில் உயர்கல்வி படிக்கும் பன்னாட்டு மாண வர்கள், விசா நிபந்தனைகளை கண்டிப் புடன் பின்பற்ற வேண்டும். பிரச்சினை களை தவிர்த்து, மாணவர் அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
விசா ரத்து
படிப்பை பாதியில் நிறுத்தினாலோ, வகுப்புகளை தவிர்த்தாலோ, கல்வி நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்காமல் படிப்பில் இருந்து விலகினாலோ சம்பந்தப்பட்ட மாணவர்களின் மாணவர் விசா ரத்து செய்யப்படும். அவர்கள் எதிர்காலத்தில் அமெரிக்க விசா பெறுவதற்கான தகுதியையும் இழப்பார்கள்.எனவே, எப்போதும் விசா நிபந்தனைகளை பின்பற்றி, மாணவர் அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை மய்யங்களில் சேர்க்க அறிவுறுத்தல்
சென்னை, மே 28 சென்னையில் 2 வயது முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள குழந்தைகள் மய்யங்களில் சேர்க்கும்படி பெற்றோருக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுரை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் சென்னை மாவட்டத்தில் செயல்படும் 1806 குழந்தைகள் மய்யங்களில் சத்துமாவு, ஊட்டச் சத்துடன் கூடிய கலவை உணவு போன்றவை வழங்கப்படுகின்றன.
குறிப்பாக 2 வயது முதல் 5 வயதுக்குள் பட்ட குழந்தைகளுக்கு முறை சாரா முன் பருவக் கல்வியானது செய்கைப்பாடல் கதை, விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படுகின்றன. தொடர்ந்து, அங்கன்வாடி பணியாளர்கள் தற்போது வீடுகள் தோறும் சென்று குழந் தைகள் சேர்க்கை பணியை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, பெற்றோர் தங்களது 2 வயது முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மய்யத்தில் சேர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.