பாகிஸ்தான் தாக்குதலில் பாதிப்புக்கு ஆளான காஷ்மீர் எல்லையோர மக்களுக்கு ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

viduthalai
3 Min Read

பூஞ்ச், மே.25- காஷ் மீர் எல்லையில் பாகிஸ் தான் தாக்குதலில் பாதிக்கப் பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ராகுல்காந்தி ஆறுதல் கூறினார்.

28 பேர் சாவு

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து, இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லையில் அந்த நாட்டு ராணுவம் அத்துமீறியது.  குறிப்பாக காஷ்மீர் எல்லை யில் கடந்த 7 முதல் 10-ந்தேதி வரை இடைவிடாமல் டிரோன் மற்றும் பீரங்கி குண்டுகளால் தாக்கியது. இதில் காஷ்மீர் எல் லையோர மாவட்டங்கள் பெரும் சேதங்களை சந்தித்தன.  பாகிஸ்தானின் இந்த அடா வடியில் 28 பேர் கொல்லப்பட் டனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரி ழந்த வர்களில் 13 பேர் பூஞ்ச் மாவட் டத்தை சேர்ந் தவர்கள் ஆவர்.

மாணவர்களை சந்தித்தார்

இவ்வாறு பாகிஸ்தானின் கொடூர தாக்குதலில் உறவுகள் மற்றும் உடை மைகளை இழந்த மக்களை சந்திப்ப தற்காக மக்க ளவை எதிர்க் கட்சித்தலைவர் ராகுல் காந்தி நேற்று (24.5.2025) காஷ்மீர் சென்றார்.  விமானம் மூலம் ஜம்மு சென்றடைந்த ராகுல் காந்தி, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் எல்லையோர மாவட்டமான பூஞ்ச் சென்றார். அங்கே பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பள்ளியை பார்வையிட்டார்.  அந்த கிறிஸ்தவ பள்ளியில் பயின்று வந்த 12 வயது இரட்டையர்களான அலி, பாத்திமா என்ற 2 மாணவர்கள் இந்த தாக்குதல்களில் கொல்லப் பட்ட நிலையில், அவர்களது நண்பர்களையும், சக மாணவர்களையும் ராகுல் காந்தி சந்தித்தார்.

நண்பர்களை உருவாக்குங்கள்

அவர்களுடன் பேசும் போது,‘நீங்கள் கொஞ்சம் ஆபத்தையும், கொஞ்சம் அச்சுறுத்தும் சூழலையும் பார்த்திருக்கிறீர் கள். ஆனால் கவலைப்பட வேண்டாம், எல்லாம் சீராகும். நீங்கள் மிகவும் கடினமாகப் படிப்பதும், மிகவும் கடினமாக விளையாடுவதும், பள்ளியில் நிறைய நண்பர்களை உருவாக் குவதுமே இந்த பிரச்சினையை நீங்கள் எதிர்கொள்ளும் விதமாக இருக்க வேண்டும்’ என ஆறுதலும், ஊக்கமும் தெரிவித்தார்.  ராகுல் காந்தியை பார்த்த பள்ளி மாணவ- மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந் தனர். கரங்களை தட் டியும், கையசைத்தும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  பின்னர் தாக்குதலில் உறவுகளை இழந்த பொதுமக்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் ஒரு மணி நேரத்துக்கு மேல் அவர்களுடன் பேசிய அவர், அவர்களது கவலையையும், துயரத்தையும் கேட்டறிந்தார்.

இழப்பீட்டை அதிகரிக்க வேண்டுகோள்

அப்போது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலின் கொடூரத்தை அந்த மக்கள் ராகுல் காந்தியிடம் விளக்கினர். குறிப்பாக தனது வீட்டை பறிகொடுத்த இளம்பெண் ஒருவர், தானும், 5 சகோதரிகளும் மயி ரிழையில் உயிர் தப்பியதை ராகுல் காந்தியிடம் எடுத்துரைத்தார். பாகிஸ்தானின் பீரங்கி குண்டு தங்கள் வீட்டு மாடியை தாக்கியபோது, தரை தளத்தில் இருந்ததால் உயிர் தப்பியதாக அவர் கூறினார்.

இவ்வாறு சேதமடைந்த தங்கள் வீடுகளுக்கான இழப்பீட் டுத்தொகையை அதிகரித்து பெற்றுத்தருமாறு அந்த மக்கள் ராகுல் காந்தியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்க ளிடம் ராகுல் காந்தி பேசும் போது, ‘இது ஒரு மிகப்பெரும் துயரம். பாகிஸ்தான் ராணுவம் பொதுமக்களை நேரடியாக குறிவைத்து இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசி, அவர்களது பிரச்சினையை புரிந்து கொள்ள முயன்றேன். தங்கள் பிரச்சினையை தேசிய அளவில் எடுத்துச்செல்ல அவர்கள் கேட்டுக்கொண்ட னர். நான் அதை செய்வேன்’ என உறுதிபட தெரிவித்தார்.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *