கரூர், மே 25- கரூர் பெரியார் பெருந்தொண்டர், ராயனூர் பொன்நகர் கி.பழனிச்சாமி படத்திறப்பு விழா நடைபெற்றது. கரூர் மாவட்ட கழகத் தலைவர் ப. குமாரசாமி 21.5.2025 அன்று காலை பொன் நகர் பழனிச்சாமியின் படத்தை திறந்து வைத்தார். மகன் ப.பன்னீர்செல்வம், துணைவியார் சுதா, மகள் இனியா, மகன் உதயா, மகன் ப.கவுதமன் வாழ்விணையர் லதா, மகன் சித்தார்த்தன் மற்றும் அவரது குடும்பத்தினர்ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட கழக காப்பாளர் வே.ராஜு, மாவட்டசெயலாளர் காளிமுத்து, மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பொம்மன், கலை இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் கட்டளை வைரவன், மாவட்டத் துணைச் செயலாளர் அலெக்ஸ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜெகநாதன், கவிஞர் கருவூர் கன்னல், மாவட்ட இளைஞரணி தலைவர் விக்னேஷ், குளித்தலை நகர அமைப்பாளர் சந்தான பாண்டியன், கரூர் நகர தலைவர் ம. சதாசிவம், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் பெருமாள், அமைப்பாளர் ராமலிங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் காந்திகிராமம் ச. ராஜா, மாணவர் கழகம் கெவின் மோசஸ் மற்றும் கழகத் தோழர்கள், அவரது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவரது நினைவைப் போற்றும் வகையில் நினைவேந்தல் உரையாற்றினர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் காளிமுத்து நன்றி உரையாற்றினார்.
கரூர் பெரியார் பெருந்தொண்டர் கி.பழனிச்சாமி படத்திறப்பு நினைவேந்தல்
Leave a Comment