மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய தமிழ் பள்ளிகளில் ஒன்றான ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட ரவாங் நகர தமிழ் பள்ளிக்கு பாவேந்தர் பாரதிதாசனின் “தவறு இன்றித் தமிழ் எழுத” நூல்கள் 500 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நூலில் பெரியார் அண்ணா, கலைஞர், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் தன்முனைப்புக் கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக மு கோவிந்தசாமி ஏற்பாடு செய்திருந்தார்.