சேலம், மே 21- காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு 19.5.2025 அன்று நீர்வரத்து வினாடிக்கு 6,233 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 109.33 அடியாக உயர்ந்தது.
கோடை காலம் நீடிக்கும் நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் வரை, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3,000 கன அடிக்கு மேல் இருந்தது. இது 18.5.2025 அன்று 4,764 கன அடியாக அதிகரித்தது. இந்நிலையில் மேட்டூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டியது.
நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூரில் மட்டும் 55.4 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனிடையே நேற்றும் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் மட்டுமல்லாது மேட்டூர் சுற்று வட்டாரத்திலும் கனமழை பெய்தது. குறிப்பாக மேட்டூரில் ஒரே நாளில் 100.6 மில்லி மீட்டர் மழை கொட்டியது. தொடர் மழையின் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 6,233 கன அடியாக அதிகரித்துள்ளது.
109 அடியாக உயர்வு
இதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.52 அடியில் இருந்து, நேற்று முன்தினம் 109.33 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 76.32 டிஎம்சியிலிருந்து, நேற்று 76.74 டி.எம்.சி யாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து காவிரியில் வினாடிக்கு 1,000 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் அடுத்தடுத்த நாட்களாக தொடரும் மழையால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப்பிரதேச பிஜேபி ஆட்சியின் நிர்வாக அலங்கோலம்
பணம் கொடுத்தால் பல்கலைக்கழகத்தில் போலி மதிப்பெண் சான்றிதழ்கள்
லக்னோ, மே 21- உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் மோனாட் என்ற தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் போலியாக வழங்கப்படுவதாக புகார்கள் வந் தன.
இதையடுத்து சிறப்பு அதிகாரிகள் குழுவினர் அந்த பல்கலைக்கழகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஏராளமான போலி மதிப்பெண் சான்றிதழ்கள், பட்டப்படிப்பு சான்றிதழ்கள் இருந்தன. அவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து 5 மணி நேரத்துக்கும் மேலாக பல்கலைக்கழக ஊழியர்கள், நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது போலி மதிப்பெண் பட்டியல் வழங்க பல்கலைக் கழக நிர்வாகம், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.4 லட்சம் வரை வசூலித்ததாக தகவல்கள் உறுதியானது.
இதையடுத்து பல்கலைக்கழக தலைவர் விஜேந்திர சிங் ஹூடா உள்பட 10க்கும் மேற்பட்டவர்களை சிறப்பு படை யினர் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.